பெண் குழந்தைகளுக்கு 50ஆயிரம்.! உடனே விண்ணப்பியுங்கள்- என்ன தகுதி.? ஆவணங்கள் என்ன வேண்டும்.? ஆட்சியர் அறிவிப்பு
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
School Student
கல்வி ஊக்கத்தொகை
இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும். இந்த் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விண்ணப்பிக்க தகுதிகள்
இந்த திட்டத்தின் கீழ் பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும். பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது. வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Girl Child Protection Scheme
18வயது - முதிர்வு தொகை
இந்தநிலையில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
வைப்புநிதி பத்திரம்.
10 ம் வகுப்பு மதிப்பெண் சான்று.
பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம்.
பயனாளியின் வண்ணப் புகைப்படம்.
school
எங்கே விண்ணப்பிப்பது.?
குறிப்பிட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலனார் மாளிகை. 8 வது தளம், இராஜாஜி சாலை. சென்னை -01 அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.