- Home
- Gallery
- School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! எந்த மாவட்டம் தெரியுமா?
School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! எந்த மாவட்டம் தெரியுமா?
கடம்பனேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதால் குளித்தலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kadambavaneswarar Temple
கரூர் மாவட்டம், குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோயில். முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதியில் கோயில் அமைந்திருந்ததால், சிவபெருமான் கடம்பவனேஸ்வரர் என்று திருப்பெயர் ஏற்றார். இங்கு தல விருட்சம் கடம்ப மரம். சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும்.
School Holiday
இந்நிலையில் நாளை கடம்பவனேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு திருவிழா நடைபெறுகிறது. குடமுழுக்கு திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கூடி வழிபட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Student: தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
karur District Collector
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கை ஒட்டி குளித்தலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூலை 27ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.