Tamil Nadu Rains : தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

ஜூலை மாதம் முடிந்து தற்பொழுது ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பருவமழை காலமும் சரியான நேரத்தில் தொடங்கி இருக்கிறது. காற்றின் வேகம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதினால், தலைநகர் சென்னையில் மட்டுமில்லாமல் பரவலாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பொழிவு ஏற்படுகிறது. 

தமிழகம், குறிப்பாக சென்னையில் வானிலை எப்படி இருக்கும்? என்பது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கும் தமிழக வெதர் மேன் பிரதீப் ஜான் "தமிழகத்தின் வடக்கு மற்றும் தென்பகுதிகளில் இன்று இரவு அதிக கனமழை இருக்கும் என்றும், சென்னையை பொருத்தவரை இடியுடன் கூடிய கனமழை பல இடங்களில் பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும்" கூறியிருக்கிறார். 

பாஜக மாநில தலைவர் ரேஸ்; வானதியை ஓரம் கட்டிய ராகவன் - விரைவில் வெளியாக இருக்கும் பரபரப்பு தகவல்

சூப்பர் மழை மேகங்களானது வேலூருக்கு அருகே நிலை கொண்டிருப்பதாகவும், இரவு நேரத்தில் சென்னையை நோக்கி நகரும் அந்த மேகங்களால் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார். தமிழகத்தில் பல இடங்களில் இரவு நேரங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக காலை நேரங்களில், வெயில் ஓரளவுக்கு இருந்து வரும் நிலையில், மாலை நேரங்களில் மேகங்கள் சூழ்ந்து, இரவு நேரங்களில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 10 நாள்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?