Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?

சென்னை மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் Zero is Good விளம்பரம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த விளம்பரத்தின் அர்த்தம் என்ன என்று பொதுமக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

What is Zero is Good? Chennai Traffic Police Campaign trending sgb
Author
First Published Aug 5, 2024, 6:00 PM IST | Last Updated Aug 5, 2024, 8:49 PM IST

சென்ற 2 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் பல இடங்களில் Zero is Good என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். 

மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே போன்ற பேனர்கள் சில வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் இந்த விளம்பரம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த விளம்பரத்தின் அர்த்தம் என்ன என்று பொதுமக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

போக்குவரத்து போலீசார் இதன் மூலம் ஏதோ ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என பலர் கருதுகின்றனர். இந்த விளம்பரம் சாலை விபத்துகளைத் தவிர்ப்பது, சாலை விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவ்வை தொடர்பானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

குட்டீஸை கவரும் பிளானுடன் ரெடியாகும் ஆப்பிள் வாட்ச் SE! கலர் கலரா சூப்பரா இருக்கு!

U Turn விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி இந்த விளம்பரப் பதாகைகளை வைத்திருக்கலாம் என்றும் எனவும் சில வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். உண்மையில், இந்த விளம்பரத்தின் நோக்கம் என்ன? என்று அனைவரும் யோசனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஜீரோ ஈஸ் குட் (Zero is Good) விளம்பரம் எதற்காக என்று போக்குவரத்து காவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவரை காத்திருக்குமாரும் கூறுகின்றனர்.

இதனிடையே சென்னை மாநகரின் பல பகுதிகளில் காணப்படும் Zero is Good விளம்பரம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிளது. #ZeroIsGood என்ற ஹேஷ்டேக் ஒன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறது. எதற்காக இந்த விளம்பரம் என்று தெரியாமலே பலரும் இந்த ஹேஷ்டேகைக் குறிப்பிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்து இருக்கிறாரா ஷேக் ஹசீனா? வங்கதேச பிரதமர் பதவி ராஜினாமா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios