ஹேக் ஹசீனா திங்கட்கிழமை இந்தியாவில் அடைக்கலம் தேடி மேற்கு வங்கத்திற்குச் சென்றுள்ளார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஷேக் ஹசீனா அகர்தலா, பின்லாந்துக்குச்ச சென்றிருக்கிறார் என்றும் வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் தேடி ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கிளர்ச்சி வெடித்துள்ளது. இந்நிலையில், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உறுதிபடுத்தியுள்ளார்.

ஹேக் ஹசீனா திங்கட்கிழமை இந்தியாவில் அடைக்கலம் தேடி மேற்கு வங்கத்திற்குச் சென்றுள்ளார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகருக்குத்தான் ஷேக் ஹசீனா சென்றிருக்கிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷேக் ஹசீனா பின்லாந்து நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார் என்றும் வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச ராணுவ தளபதி வக்கார், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய ராணுவம் உதவி புரியும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தி நாட்டில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா அமெரிக்க சம்பளத்தில் 1/4 பங்கை எட்டவே 75 வருஷம் ஆகும்: உலக வங்கி கணிப்பு

Scroll to load tweet…

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ராணுவ தளபதி வக்கார் செய்தியாளர் சந்திப்புக்குப் முன் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக வங்கதேசத்தில் மாபெரும் போராட்டம் வெடித்தது.

ஜூலை மாதம் நடந்த போராட்டத்தின்போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களுக்கு நீதி கோரி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மூண்ட வன்முறையில் ஞாயிற்றுக்கிழமை 90 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை போராட்டக்காரர்கள் வங்கதேச நாடாளுமன்றத்திற்குள் புகுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலையையும் உடைத்துள்ளனர்.

மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?