10:35 PM (IST) Oct 28

உலகின் டாப் 10 ஈவு இரக்கமில்லாத கொடூர சீரியல் கில்லர்கள்.. இந்த பட்டியலில் பெண்களும் இருக்கிறார்கள்!

மனிதர்களைக் கொல்வதில் காட்டுமிராண்டித்தனத்தின் எல்லா வரம்புகளையும் தாண்டிய தொடர் கொலையாளிகள் உலகில் சிலர் இருந்திருக்கிறார்கள். உலகின் மிகவும் பயங்கரமான 10 கொலையாளிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

09:37 PM (IST) Oct 28

சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34 சதவிகிதம் குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் படிக்க

09:00 PM (IST) Oct 28

உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது.

மேலும் படிக்க

08:59 PM (IST) Oct 28

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது, ஆனால்..? அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி

தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மட்டும் என்ஐஏ நான்கே நாட்களில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும் படிக்க

06:46 PM (IST) Oct 28

நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

நவம்பர் 1ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மேலும் படிக்க

06:15 PM (IST) Oct 28

மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை.! மீண்டும் சூடுபிடித்த சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு - அடுத்தடுத்து அதிரடி

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

06:08 PM (IST) Oct 28

சென்னை போலீஸ் அதிரடி ரைடு !! நேற்று ஒரே நாளில் அடிதடி வழக்கில் 92 குற்றவாளிகள் கைது..

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் பதிவான அடிதடி, கொடுங்காயம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க

05:52 PM (IST) Oct 28

பிரதமர் மோடி - ரிஷி சுனக் முதல் சந்திப்பு ரெடி! இந்தோனேசியாவில் பக்காவாக பிளான் - எதற்கு தெரியுமா ?

பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

மேலும் படிக்க

05:17 PM (IST) Oct 28

இந்திய ராணுவத்தில் ரூ.81,100 சம்பளத்தில் சூப்பர் வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable, Head Constable பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க

04:42 PM (IST) Oct 28

கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வருகின்றனர்.

மேலும் படிக்க

04:30 PM (IST) Oct 28

சாமி கும்பிட்டு திருடிய சிங்க முகமூடி கொள்ளையன்.. சிசிடிவி காட்சி

ஆரூர் அடுத்த புதனன்கடியில் உள்ள ஸ்ரீ குமாரவிலாசம் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது. சாமியின் கருவறையை உடைத்து நுழைந்த திருடன், அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளான்.மேலும் படிக்க

04:15 PM (IST) Oct 28

கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை

கோவையில் முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:52 PM (IST) Oct 28

இந்திய ரூபாய் நோட்டுகள் & நாணயங்கள் எப்படி உருவாகிறது தெரியுமா ? இவ்வளவு ரூல்ஸ் இருக்கா ?

இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:04 PM (IST) Oct 28

பேன்சி ஸ்டோரில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சி

ன்று மதியம் இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கோபால கிருஷ்ணனை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளனர்.மேலும் படிக்க

03:04 PM (IST) Oct 28

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளிவரும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

01:36 PM (IST) Oct 28

விடியலாட்சி தருவோம் சொன்ன முதல்வரே ஏண்டா விடியுது என புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கு.. டிடிவி. விமர்சனம்..!

கோவை சம்பவம் தொடர்பாக, தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல், இதைப்பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர், காவல்துறைக்கு தலைவராக இருக்கக்கூடியவர் மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாடு அரசாங்கம் தீவிரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க

01:34 PM (IST) Oct 28

பொங்கல் ரேஸில் இணைந்த அஜித்... ‘வாரிசு’க்கு எதிராக ‘துணிவு’டன் களமிறங்கும் உதயநிதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துணிவு படத்தின் தமிழக திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேஸில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க

01:17 PM (IST) Oct 28

கணினி பயிற்றுநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ

சேலம்‌ மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்‌ பள்ளியில்‌ கணினி பயிற்றுநர்‌ பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

01:10 PM (IST) Oct 28

அடப்பாவிங்களா.. இதுக்காகவா புதுமாப்பிள்ளை கொலை செஞ்சீங்க.. குற்றவாளிகள் சொன்ன பகீர் வாக்குமூலம்..!

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க

12:53 PM (IST) Oct 28

வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..

வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறிய ஊருக்கு புகுந்த புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 12 வயதாகும் ஆண் புலி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4,30 மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்த போது வனத்துறையினர் வைத்திருந்த வலையில் சிக்கியதுமேலும் படிக்க