பேன்சி ஸ்டோரில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சி
புதுக்கோட்டை பேன்சி ஸ்டோர் கடையில் புகுந்து ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் பொருட்களை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர், அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். அதில் கோபாலகிருஷ்ணன் என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கோபால கிருஷ்ணனை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க:ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு ஆப்பு.. முன்பதிவை ரத்து செய்தால் அபராதம்.. புதிய நடைமுறை அமல்..!
சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த உரிமையாளர் பாலமுருகன், மர்மகும்பலால் கடை அடித்து நொறுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இதுக்குறித்து விசாரணை நடத்தினர்.
நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்ற ஒருவருக்கு பாலமுருகன் ஆதரவாக செயல்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தற்போது அவரது கடையை அடித்து நொறுக்கி இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க:ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை..! சத்யா இறந்து போவார்னு நினைக்கலை- கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
இந்நிலையில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.