தமிழகத்தில் ஓலா , ஊபர் உள்ளிட்ட செயலிகள் மூலம் கார் மற்றும் ஆட்டோக்கள் இயங்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் பொதுமக்கள் அதிகளவு இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

ஓலா , ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் முன்பதிவை ரத்து செய்யும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் ஓலா , ஊபர் உள்ளிட்ட செயலிகள் மூலம் கார் மற்றும் ஆட்டோக்கள் இயங்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் பொதுமக்கள் அதிகளவு இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் மீது பயணிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்காக ஓலா, ஊபர் செயலியில் பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்கள் வசதிக்கேற்ப ஓட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்துவதாகவும், பயணிகள் சென்றடையும் இடங்களிலிருந்து போதுமான முன்பதிவு கிடைக்காது என்பதால் பயணிகளுக்கு தெரியாமலேயே முன்பதிவை ரத்து செய்துவிடுகின்றனர். இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், பயணிகளின் முன்பதிவை நிராகரிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆட்டோக்களுக்கு 50 ரூபாயும், கார்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18004255430 என்ற எண்ணில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.