Tamil News live : அதிமுக தலைமை விவகாரம்.. ஓபிஎஸ் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

Tamil News live updates today on july 24 2022

அதிமுகவில் தலைமை விவகாரம் நீடிக்கும் சூழலில், ஓபிஎஸ் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் சென்னை வருகை தரும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் , தற்போது 14 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். ஓபிஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர் தர்மர் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கே.செல்வராஜ் கோவை மாநகர் மாவட்ட செயலாளராகவும் முன்னாள் எம்.பி ஆர். கோபாலகிருஷ்ணன் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

5:12 PM IST

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..

தமிழகத்தில் யாருக்கும் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 மேலும் படிக்க

3:15 PM IST

குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் நடந்தது என்ன..?

சீர்காழியில் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
 
3:13 PM IST

திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த நடிகை ரோஜா

நடிகை ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வந்திருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக காவடி எடுத்தபடி நடந்து வந்த நடிகை ரோஜா, தனது வேண்டுதலையும் நிறைவேற்றினார்.மேலும் படிக்க

3:08 PM IST

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை தரும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 
2:50 PM IST

ஓபிஎஸ் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

அதிமுகவில் தலைமை விவகாரம் நீடிக்கும் சூழலில், ஓபிஎஸ் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் சென்னை வருகை தரும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் , தற்போது 14 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். ஓபிஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர் தர்மர் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:37 PM IST

பிரதமர் மோடியை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்

வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் சந்திக்காமலே சென்னை திரும்பினார். சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வரும் பிரதமர் மோடி இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1:33 PM IST

நல்ல அறிவிப்பு.. முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்.. புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்.. எதற்கு தெரியுமா..?

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
1:19 PM IST

பாஜக துணை தலைவர் விடுதியில் விபச்சாரம்...! அடைத்துவைக்கப்பட்ட சிறுமிகளை அதிரடியாக மீட்ட போலீசார்..

மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த புகாரில் விடுதியில் நடைபெற்ற சோதனையில் 6 சிறுவர், சிறுமிகளை மீட்ட போலீசார், 73 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

12:24 PM IST

வகுப்பறைக்குள் முத்த போட்டி...சீருடையோடு மாணவனுக்கு லிப்லாக் செய்த மாணவி..! அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு

போட்டியில் தோல்வி அடையும் நபர் முத்தம் வழங்க வேண்டும் என விதியின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில், மாணவி ஒருவர் மாணவனுக்கு உதட்டு முத்தம் வழங்கிய காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..
 
11:30 AM IST

டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று - இதுவரை 4 பேர் பாதிப்பு

டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவருக்கு உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

11:28 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த ஓபிஎஸ் மருத்துவமனையிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்டார். கடந்த 10 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

10:51 AM IST

நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நீரஜ் சோப்ராவின் சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று பாராட்டினார். அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார்.
 
10:38 AM IST

நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது

வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் ஐஸ்வர்ய பெற்றுக் கொண்டார். மேலும் படிக்க

10:18 AM IST

அழுத்தம் கொடுக்கும் ஓபிஎஸ்...! இபிஎஸ்க்கு நோ சொன்ன மோடி..! குடியரசு தலைவர் பதிவேற்பு விழாவில் பங்கேற்காமல் சென்னை திரும்பிய எடப்பாடி...

அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவை முடிந்த பின்னர் விரிவாக பதில் அளிப்பேன் என  ஓ.பன்னீர்செல்வம் கடிதம் குறித்த  கேள்விக்கு அ.தி.மு.க  இடைக்கால பொதுச்செயலாளர்  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:52 AM IST

என்னை அறியாமலே ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் பேச்சு

உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ரஜினி, விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், குறிப்பாக சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களையும், அவரது ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன் நான். அவரைப் போல் ஸ்டைல் வந்துவிடக் கூடாது என நான் தவிர்க்க பார்ப்பேன், ஆனால் அதையும் மீறி ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது. மேலும் படிக்க

9:27 AM IST

ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான், திடீரென டிடிவியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

8:50 AM IST

சுதா கொங்கராவின் அடுத்த பட அப்டேட்

இயக்குனர் சுதா கொங்கரா சூர்யா மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். இதில் அவர் யார் படத்தை முதலாவதாக இயக்க உள்ளார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி முதலாவதாக சூர்யா நடிக்க உள்ள படத்தை தான் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும், அடுத்ததாக சிம்புவின் படத்தை இயக்க இருப்பதாகவும் அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

8:32 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை

உலக தடகள போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இறுதிச் சுற்றில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா. 

8:00 AM IST

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 27ம் தேதி வரை இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

7:58 AM IST

சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா..! புது குண்டை தூக்கிப் போட்ட ப்ளூ சட்டை மாறன்

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

7:32 AM IST

மைனஸ் மார்க் இருக்கு.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ !

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman). இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் படிக்க

5:12 PM IST:

தமிழகத்தில் யாருக்கும் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 மேலும் படிக்க

3:15 PM IST:

சீர்காழியில் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
 
3:13 PM IST:

நடிகை ரோஜா ஆடி கிருத்திகை தினமான நேற்று குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வந்திருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக காவடி எடுத்தபடி நடந்து வந்த நடிகை ரோஜா, தனது வேண்டுதலையும் நிறைவேற்றினார்.மேலும் படிக்க

3:08 PM IST:

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை தரும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 
2:50 PM IST:

அதிமுகவில் தலைமை விவகாரம் நீடிக்கும் சூழலில், ஓபிஎஸ் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் சென்னை வருகை தரும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் , தற்போது 14 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். ஓபிஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர் தர்மர் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:37 PM IST:

வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் சந்திக்காமலே சென்னை திரும்பினார். சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வரும் பிரதமர் மோடி இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1:33 PM IST:

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
1:19 PM IST:

மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த புகாரில் விடுதியில் நடைபெற்ற சோதனையில் 6 சிறுவர், சிறுமிகளை மீட்ட போலீசார், 73 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

12:24 PM IST:

போட்டியில் தோல்வி அடையும் நபர் முத்தம் வழங்க வேண்டும் என விதியின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில், மாணவி ஒருவர் மாணவனுக்கு உதட்டு முத்தம் வழங்கிய காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..
 
11:30 AM IST:

டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவருக்கு உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

11:28 AM IST:

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த ஓபிஎஸ் மருத்துவமனையிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்டார். கடந்த 10 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

10:59 AM IST:

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நீரஜ் சோப்ராவின் சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று பாராட்டினார். அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார்.
 
12:25 PM IST:

வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் ஐஸ்வர்ய பெற்றுக் கொண்டார். மேலும் படிக்க

10:18 AM IST:

அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவை முடிந்த பின்னர் விரிவாக பதில் அளிப்பேன் என  ஓ.பன்னீர்செல்வம் கடிதம் குறித்த  கேள்விக்கு அ.தி.மு.க  இடைக்கால பொதுச்செயலாளர்  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:52 AM IST:

உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ரஜினி, விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், குறிப்பாக சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களையும், அவரது ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன் நான். அவரைப் போல் ஸ்டைல் வந்துவிடக் கூடாது என நான் தவிர்க்க பார்ப்பேன், ஆனால் அதையும் மீறி ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது. மேலும் படிக்க

9:27 AM IST:

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான், திடீரென டிடிவியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

8:50 AM IST:

இயக்குனர் சுதா கொங்கரா சூர்யா மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். இதில் அவர் யார் படத்தை முதலாவதாக இயக்க உள்ளார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி முதலாவதாக சூர்யா நடிக்க உள்ள படத்தை தான் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும், அடுத்ததாக சிம்புவின் படத்தை இயக்க இருப்பதாகவும் அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

8:32 AM IST:

உலக தடகள போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இறுதிச் சுற்றில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா. 

8:00 AM IST:

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 27ம் தேதி வரை இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

7:58 AM IST:

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

7:32 AM IST: