தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..
தமிழகத்தில் யாருக்கும் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க:முதல்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை.. வெளிநாடு எதுவும் செல்லாத நிலையில் பாதிப்பு..
மேலும் உலகளவில் 79 நாடுகளில் இதுவரை குரங்கம்மை நோய் பரவியுள்ளதால், உலக அளவிலான சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் குரங்கம்மை தொற்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க:குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் நடந்தது என்ன..?
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முகத்திலோ , முழங்கை கீழ் கொப்பளங்கள் உள்ளதா என்றும் கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழக கேரள எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. இன்றுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை என்றும் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.