Asianet News TamilAsianet News Tamil

நல்ல அறிவிப்பு.. முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்.. புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்.. எதற்கு தெரியுமா..?

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

PMK Founder Ramadoss tweet about free 5 unit electricity scheme
Author
Tamilnádu, First Published Jul 24, 2022, 1:28 PM IST

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்றுதனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது. மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவான வெகுமதியாக இருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்று நட வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். இன்றைய சூழலில், உலகையும், உலக மக்களையும் காக்க இந்த உணர்வு தான் தலையாயத் தேவையாகும்.

மேலும் படிக்க:மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரஜினி.. இப்படி இருந்தா நிம்மதி எப்படி வரும்..? கேள்வியெழுப்பி சூடாக்கிய சீமான்

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்க்ரீட் பாலைவனங்களான நகர்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும். ஜார்கண்ட் அரசுக்கு பாராட்டுகள்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 73வது வனத் திருவிழாவில் கலந்துக்கொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர், நகர்புறங்கள் முழுவதும் கான்கீரட் மயமாவதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மரக்கன்று நட்டு, அதை பராமரித்து மரமாக வளர்ப்பவர்களின் வீட்டிற்கு ஐந்து யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும் என்னும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசினார். ஆனால் இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது என்று சரியான மரமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களால் நடப்படும் மரங்கள், இது எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்க உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு..!! மரம் வளர்த்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்.. எங்கு தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios