Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் அறிவிப்பு..!! மரம் வளர்த்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்.. எங்கு தெரியுமா..?

வீட்டில் மரம் நட்டு அதனை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு தலா 5 யூனிட்  இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். 
 

5 units power free for planting trees in Jharkhand
Author
India, First Published Jul 23, 2022, 11:59 AM IST

ராஞ்சியில் நடைபெற்ற 73வது வனத் திருவிழாவில் கலந்துக்கொண்டு பேசிய அவர், மாநிலத்தின் வனப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள்து. கடந்த ஆண்டு 1.8 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. எனவே இந்த ஆண்டு 2.34 கோடி மரக்கன்றுகள் நட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது எனவும் அரசின் இந்த சலுகை மாநிலத்தின் நகர்ப்புறங்களில் பசுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நகர்புறங்கள் முழுவதும் கான்கீரட் மயமாவதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மரக்கன்று நட்டு, அதை பராமரித்து மரமாக வளர்ப்பவர்களின் வீட்டிற்கு ஐந்து யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும் என்னும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசினார். ஆனால் இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது என்று சரியான மரமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களால் நடப்படும் மரங்கள், இது எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்க உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க:இந்த கோலத்துலயா உன்னை பார்க்கணும்.. மகளின் இறுதி ஊர்வலத்தில் நெஞ்சில் அடித்து கதறிய தாய்.!

மேலும் பேசிய அவர், நம் மாநிலம் பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டதால் மட்டுமே கொரோனாவில் இருந்து நாம் ஓப்பிட்டளவில் பாதுக்காக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. வளர்ந்து வரும் நகரமயமாக்கல், சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் இது நகரங்களில் இருந்து பசுமை மறைவதற்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.  நான் இயற்கை அழிப்பதற்கு எதிரானவன் என்ற குறிப்பிட்ட அவர், மரம் வெட்டுவதற்கு அனுமதி தேவையில்லை என்ற திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டால் ஜார்கண்ட் காடுகள் பாதுகாப்பாக இருக்காது என்று பேசினார்.

பாதுகாக்கப்பட்ட காடுகளின் ஐந்து கிமீ சுற்றளவில் இயங்கும் அனைத்து மர அறுக்கும் ஆலைகளையும் மூடுவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். வீட்டில் மரம் நட்டு அதனை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு தலா 5 யூனிட்  இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் அறிவிப்பு தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்.. கதறிய அழுத தந்தை, உற்றார் உறவினர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios