ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?

 ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான், திடீரென டிடிவியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

OPS supporter Syedukhan met TTV Dhinakaran which created a stir

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் 95% நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததன் காரணமாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்தநிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக பேச்சு எழுவதற்க்கு முன்னதாக தேனி மாவட்டத்தில் தான் ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. ஆனால் அந்த முழக்கத்தில் அதிமுக ஒற்றை தலைமையாக சசிகலாதான் வர வேண்டும் வலியுறுத்தப்பட்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் நீங்க அதிமுக தொண்டரா? வெட்கமா இல்லை.. ஓபிஎஸ்சை டாராக கிழித்த சி.வி சண்முகம்

நான் சொல்லிதான் இபிஎஸ்ஸோடு ஓபிஎஸ் சேர்ந்தார் என்று மோடி சொன்னாரா.? ஓபிஎஸ்ஸை டாராக கிழித்த மாஜி அமைச்சர்!

OPS supporter Syedukhan met TTV Dhinakaran which created a stir

டிடிவி- சையது கான் சந்திப்பு

இதனையடுத்து அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான்  ஓபிஎஸ்யிடம் கொடுத்தது தான், இபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையவைத்தது. இதன் காரணமாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது அதற்க்கு முடிவும் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் சையது கானின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஓ.பன்னீர் செல்வத்தின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் சையது கான் நேற்று திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமமுக அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரையின் மனைவி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த அதிமுக  தேனி மாவட்ட செயலாளர் SPM.சையதுகான் சென்றிருந்தார். அப்போது டிடிவி தினகரனும் அந்த இடத்திற்கு வந்திருந்தார். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்தி உடல் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சம்பவம் தேனி மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios