Tamil News live : 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று !
சுருக்கம்
தற்போது 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்படங்களின் விபரம் இதோ சிறந்த பின்னணி இசை - சூரரை போற்று (GV பிரகாஷ்) ,சிறந்த ஸ்கிரீன் பிளே - சூரரை போற்று,சிறந்த வசனம் - மண்டேலா,சிறந்த துணை நடிகை - அபர்ணா பாலமுரளி,சிறந்த நடிகர் - சூர்யா, சிறந்த படம் - சூரரை போற்று பெற்றுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !
Arulnithi dejavu movie review : இதில் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றதாக கூறும் ரசிகர்கள் மறு பாதியில் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் படம் மாறுபட்ட கதைக்களத்துடன் வரவேற்பை பெற்று வருகிறது.
ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்
இந்த வருட தேசிய விருதை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்கள் ஏமாற்றத்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில் முதலீடை பிடித்துள்ளது க/பெ ரண சிங்கம்.
சூர்யாவைப் போல் அக்ஷய் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு
சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இதுவே முதன்முறை ஆகும். இது தவிர மேலும் ஒரு நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தான். டனாஜி தி அன்சங் வாரியர் என்கிற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க
05:19 PM (IST) Jul 22
சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா!
இந்த படம். திரையரங்குகளுக்கு வராமல் இது நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மூலம் கடந்த ஏப்ரல் நான்காம் தேதி வெளியானது.
யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா படம் சிறந்த திரைக்கதை மற்றும் டயலாக் ஆகியவற்றிற்காக 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இந்த இரண்டு விருதுகளையும் மடோன் அஸ்வின் தான் வென்றுள்ள
05:09 PM (IST) Jul 22
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருது
வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த படத்தொகுப்புக்காக இப்படத்தில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியாவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த் தமிழ் படமாகவும் இது தேர்வு செய்யப்பட்டு உள்ளது
05:06 PM (IST) Jul 22
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு 5 தேசிய விருது
சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்கான தேசியவிருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப்போற்று தட்டித்தூக்கி உள்ளது.மேலும் படிக்க
05:05 PM (IST) Jul 22
முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா
சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.மேலும் படிக்க
04:36 PM (IST) Jul 22
சிறந்த தமிழ் படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'
68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி சிறந்த படங்களுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேர்வு. வஸந்த் இப்படத்தை இயக்கினார்.
04:13 PM (IST) Jul 22
68th National Film Awards Live : நேரலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள்..லிங்க் இதோ!
68th National Film Awards Live 2022 : இன்று நடைபெற்று வரும் 68வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. லிங்க் இதோ!
கல்லணையை காப்பாற்றியவர் இவர் தான்.. ஆனால் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை.. கோரிக்கை விடுத்த அன்புமணி
தமிழ்நாட்டின் நலன்களுக்காக ஆர்தர் தாமஸ் காட்டன் செய்த பணிகளின் பட்டியல் மிக நீளமானது. ஆனால், ஆர்தர் காட்டனின் சாதனைகளை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையானது. எனவே அவரது பிறந்தநாளான மே 15-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், அதை நீர் மேலாண்மை நாளாகவும் அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
03:19 PM (IST) Jul 22
மக்களே உஷார்!! இன்று மிக கனமழை .. 23 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் திருப்பூர், தேனி உள்ளிட்ட 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:33 PM (IST) Jul 22
வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்
02:08 PM (IST) Jul 22
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:39 PM (IST) Jul 22
படிக்கிற பசங்க ஒன்னு சேர்ந்து.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டானுங்க.. கதறிய தாய்
திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
01:35 PM (IST) Jul 22
கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட ரமணா(28) எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய குடியரசு தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புகிறேன்.. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.
புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புவதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சாராய ஆலை ஓடுகிறது என்றும், மேலும் 6 மதுபான ஆலைகள் அமைக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படிக்க