- Home
- Cinema
- Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !
Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !
Arulnithi dejavu movie review : இதில் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றதாக கூறும் ரசிகர்கள் மறு பாதியில் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் படம் மாறுபட்ட கதைக்களத்துடன் வரவேற்பை பெற்று வருகிறது.

dejavu
உதயநிதி ஸ்டாலினின் சகோதரரான அருள்நிதி சமீப காலமாக த்ரில்லர் படங்களை அதிகமகா தேர்ந்தேடுத்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமான்டி காலனி, தற்போது டி பிளாக் உள்ளிட்ட படங்கள் டார்க் த்ரில்லராக அமைந்து ரசிகர்களை கவர்ந்து இருந்தன. இதை அடுத்து தற்போது தேஜாவு என்னும் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ளார் அருள்நிதி.
மேலும் செய்திகளுக்கு...ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் என்பவரின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இன்று ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள தேஜாவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
Arulnithi dejavu movie review
சஸ்பென்ஸ் திரில்லர் படமாகன இதில் அருள்நிதி, மது மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ள இதற்கு ஜிப்ரான் இசையமைப்பு மேலும் திரில்லரைக் கூட்டி உள்ளது. இந்த படம் குறித்தான விமர்சனங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.முன்னதாக தேஜாவு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவும் அருள்நிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல அருள் நிதியின் டிமான்டி காலனியை இயக்கிய அஜய் ஞானமுத்து தேஜாவு படம் ஒரு கிளிப்பிங் த்ரில்லர் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி
Arulnithi dejavu movie review
ஒரு எழுத்தாளர் எழுதும் வரிகள் உண்மையானால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து தேஜாவு உருவாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் எழுத்தாளர் எழுதுவது போலவே பெண்கள் கடத்தப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. தொடர்கதையாக நடைபெறும் க்ரைமை தடுக்க காவல்துறை முயல்கிறது. ஆனால் எழுத்தாளர் குறித்து பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் காவல் அதிகாரியாக இருக்கும் மதுபாலாவின் மகளும் அதே பாணியில் காணாமல் போகிறார்.
மேலும் செய்திகளுக்கு.. சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா
dejavu
இதனால் பதட்டமடையும் காவல் துறையினர் விஷயம் வெளியே வராமல் இருக்க காவல் அதிகாரியாக இருக்கும் அருள்நிதியை நடுகின்றனர். பின்னர் நாயகன் குற்றவாளிகளை கண்டு பிடித்து பெண் குழந்தையை காப்பாற்றுகிறாரா? என்பதே படத்தின் கதைக்களமாகும். இதில் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றதாக கூறும் ரசிகர்கள் மறு பாதியில் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் படம் மாறுபட்ட கதைக்களத்துடன் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.