சூர்யா மட்டுமல்ல இன்னொரு நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு - அவர் யார் தெரியுமா?
தமிழில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
68-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ் திரையுலகிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் தமிழ் திரையுலகிற்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன் 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு 11 தேசிய விருதுகள் கிடைத்திருந்தன. அதன்பின் தற்போது தான் 10 விருதுகளை தமிழ் படங்கள் வென்றுள்ளன.
அதன்படி தமிழில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 விருதுகளையும், யோகிபாபுவின் மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.
இதையும் படியுங்கள்... ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா
இதில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இதுவே முதன்முறை ஆகும். இது தவிர மேலும் ஒரு நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தான். டனாஜி தி அன்சங் வாரியர் என்கிற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... 5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்