MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மே 4-ல் வானிலை டோட்டலா மாறுது.. சூரியனுக்கு 'டாட்டா'.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மே 4-ல் வானிலை டோட்டலா மாறுது.. சூரியனுக்கு 'டாட்டா'.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

TN Weather Update: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் நாளான மே 4ம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 01 2026, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 1 வாரத்துக்கு பரவாலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது

மே 1ம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பல மாவட்டங்களில் கனமழை
Image Credit : Asianet News

பல மாவட்டங்களில் கனமழை

மே 2ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், திருப்பூர் மலை பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. 'ஜில் ஜில்' அப்டேட் இதோ!
Related image2
சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
34
வாக்கு எண்ணும் நாளிலும் பலத்த மழை
Image Credit : our own

வாக்கு எண்ணும் நாளிலும் பலத்த மழை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மே 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.

மே 5ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
சென்னையில் எப்படி?
Image Credit : our own

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானிலை அறிக்கை
கனமழை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
Now Playing
கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
Recommended image3
Now Playing
அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
Related Stories
Recommended image1
அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. 'ஜில் ஜில்' அப்டேட் இதோ!
Recommended image2
சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved