- Home
- Tamil Nadu News
- சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
Tamil Nadu Rain Forecast: தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், சூரியனுக்கு டாடா சொல்லும் வகையில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் பெரிய கோடை மழை ஏதும் பெய்யவில்லை. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? மழை ஏதும் பெய்யாதா? என தமிழக மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் பரவாலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு
அதாவது தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் ஏப்ரல் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை
28ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில் எப்படி இருக்கும்?
வெயிலை பொறுத்தவரை 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

