TamilNews Highlights: கனியூர் மாணவி தற்கொலை வழக்கு.. பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது!!

Tamil News live updates today on july 17 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து 5 நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல், பள்ளியின் வாகனத்திற்கு தீ வைத்தனர். தொடர்ந்து சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கும்பல், போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது. மேலும் போராட்டதை தடுத்த காவலர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் ள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

11:45 PM IST

சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?

இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-இல் இருந்து 700 ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்து 2019 வாக்கில் யூனியன் பிரதேசமாக மாறியது. இதைத் தொடர்ந்து அங்கு இன்னும் சட்டசபை அமையாமல் உள்ளது. இதன் காரணமாக எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறையும். தற்போது எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708 ஆக உள்ள நிலையில், இது 700 வரை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் படிக்க...

5:31 PM IST

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

துணை குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

5:19 PM IST

வன்முறையினால் 4,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம்

கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

5:16 PM IST

கள்ளக்குறிச்சியில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கபட்டுள்ளது.  மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
5:13 PM IST

காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்- பள்ளி நிர்வாகம்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி வீடியோ பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்கு நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

4:38 PM IST

கள்ளக்குறிச்சிக்கு விரைந்த கூடுதல் போலீஸ்- இதுவரை 30 பேர் கைது..

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 900 போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்தனர். சின்னசேலம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் நிலவுவதால் வேப்பூர் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலத்திலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் வேப்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. 

4:18 PM IST

கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து காவல்துறை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேரை கைது செய்துள்ளதாக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் வெடித்த வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

4:14 PM IST

வணங்கான் நாயகி கிருத்தி ஷெட்டியின் அட்வைஸுடன் கூடிய ஹாட் போஸ் !

இவர் சமீபத்தில் நடித்த 'தி வாரியர்' ஜூலை 14 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை  பெற்றது.

மேலும் படிக்க...வணங்கான் நாயகி கிருத்திஷெட்டியின் அட்வைஸுடன் கூடிய ஹாட் போஸ் !

3:45 PM IST

கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி , வன்முறையில் 17 காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறையினரால் எடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வன்முறை மூண்டது என்று அவர் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் அதிகரித்ததாகவும் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.மேலும் படிக்க

3:40 PM IST

இரவின் நிழல் முதல் "Non Linear" படம் இல்லை..ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலளித்த பார்த்திபன்!

15 தினங்களுக்கு முன் நானே மாறனை தொலைபேசியில்  ஸ்பெஷல் சோ பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி, என்னை திருத்தி மக்களை நான் ஏமாற்றுவதை தடுத்து இருக்கலாம் என கூறியுள்ளார் பார்த்திபன்.

மேலும் படிக்க..இரவின் நிழல் முதல் "Non Linear" படம் இல்லை..ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலளித்த பார்த்திபன்!

3:18 PM IST

பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படை விசாரணை - ஆட்சியர் பேட்டி

பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  இதனிடையே போராட்டக்காரர்களை அதிரடி படையினர் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
 
3:08 PM IST

பள்ளி மாணவி மர்ம மரணம்.. சிபிசிஐடி விசாரணை கோரிய மனு நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கை கோரிய மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

2:42 PM IST

கலவரம் நிகழ்ந்த பகுதியில் 144 தடை உத்தரவு.. காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் சின்னசேலம்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.க் கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:26 PM IST

உள்ளாடையில் ரத்தக்கறை.. மார்பு பகுதியில் காயங்கள்.. அதிர்ச்சி கிளப்பும் பிரேத பரிசோதனை அறிக்கை..

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:55 PM IST

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வெளியூர் நபர்களே காரணம்.! மாணவி மர்மச்சாவு மட்டும் காரணம் இல்லை - அன்புமணி

 சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

1:52 PM IST

பள்ளி மாணவி மர்ம மரணம் - விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

1:43 PM IST

பள்ளி மாணவி மர்ம மரணம்.. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்- முதலமைச்சர்.

மாணவியின் மரணத்தில் காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை செயலாளர், டிஜிபி சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

12:55 PM IST

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுங்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
12:44 PM IST

ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

ஏற்கனவே கமலஹாசனின் பிறந்தநாள் அன்று தனது திட்டத்திற்கான ஒன்லைனை கூறிவிட்டார் இயக்குனர். எனவே சீயான் படம் முடிந்த கையோடு கமலின் படத்தை இயக்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க...ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

12:37 PM IST

பதற்றம்!! அடித்து நொறுக்கப்படும் வாகனங்கள்.. தடுப்புகளை உடைத்து சாலை மறியல்..

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் வெடித்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் அடித்து நொறுக்கியுள்ளன. மேலும் டிராக்டர் கொண்டும் தீ வைத்தும் பள்ளி வாகனங்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னை சேலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

12:23 PM IST

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் - சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் ஆனார் பிவி சிந்து

சிங்கப்பூர் ஓபன் 2022 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் சீனாவின் வாங் சியி-யை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் 21-9 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்ற பிவி சிந்து, 2-வது செட்டில் 11-21 என தோல்வியுற்றார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-15 என வென்று வெற்றி வாகை சூடினார்.மேலும் படிக்க

12:23 PM IST

முதலமைச்சர் நாளை வீடு திரும்புகிறார்-மருத்துவமனை அறிக்கை

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்ப உள்ளதாகவும், ஒரு வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவமனை தகவல்

மேலும் படிக்க..

12:21 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

12:14 PM IST

நிலைமைக் கட்டுபடுத்த கூடுதல் காவலர்களை கேட்டுள்ளோம்- கள்ளக்குறிச்சி ஆட்சியர்

மாணவி இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும். வன்முறைகளை ஒடுக்க கூடுதல் காவலர்களை கேட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

12:08 PM IST

போராட்டக்காரர்கள் அமைதிக்காக்க வேண்டும் - டிஜிபி வேண்டுகோள்

 கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பேசிய அவர், போராட்டத்தை நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது. கலவரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்றப் பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

11:48 AM IST

மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

சூர்யா மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முந்தைய வெற்றி படமான 24 படத்தின் இயக்குனர் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

11:43 AM IST

ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..

தற்போது தமன்னா தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அதேபோல கன்னட ட்ரெய்லரை நடிகை ராய் லட்சுமி வெளியிடுகிறார்.

மேலும் படிக்க...ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..

11:34 AM IST

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..! மாணவ அமைப்பு போராட்டத்தில் வன்முறை.. போலீசார் துப்பாக்கி சூட்டால் பதற்றம்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து  வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

11:27 AM IST

பரபரப்பு!! கலவரமான போராட்டக்களம்.. காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு.. போலீஸ் மீது கல்வீச்சு..

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் , காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , அதனை கட்டுபடுத்த காவல்துறயினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
11:14 AM IST

மாணவி மர்ம மரணம்.. தனியார் பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்...!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. போர்க்களமாக மாறிய சென்னை - சேலம் நெடுஞ்சாலை.. போலீஸ் துப்பாக்கிச்சூடுதனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம். பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

11:09 AM IST

சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?

இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-இல் இருந்து 700 ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:07 AM IST

மாணவி மரணம்.. உறவினர்கள் சாலை மறியல்.. போர்க்களமாக மாறிய சென்னை - சேலம் நெடுஞ்சாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் பள்ளிக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. உறவினர்கள் போராட்டத்தினால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை போர்களமாக காட்சியளிக்கிறது. 
 
10:59 AM IST

நிரம்பி வழியும் மேட்டூர் அணை.. உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.. 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒகனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், அதனை சுற்றியுள்ள 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1.24 லட்சம் கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. 

10:35 AM IST

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

10:13 AM IST

'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !

நயன்தாராவின் ரோல் வேறு தன்னுடைய கதாபாத்திரம் வேறு எனக் கூறியுள்ளார். நயன்தாராவின் ரோல் தான் நடித்த கதாபாத்திரம் போன்றது அல்ல. நான் பஞ்சாபில் வசிக்கும் பிகாரி பெண்ணாக நடித்துள்ளேன்.  பேசும் விதம் கூட வேறு மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க...'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !

10:10 AM IST

விக்ரமின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாகும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!

தற்போது 'தரங்கிணி' பாடல் வெளியாகியுள்ளது. தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சர்தாக் கல்யாணி, மீரா செங்குத்தா ஆகியோர் பாடியுள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

மேலும் படிக்க...விக்ரமின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாகும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!

10:07 AM IST

மு.க.ஸ்டாலின் இல்லாமல் திமுக MLA கூட்டம்..! ஓபிஎஸ்சை நீக்க அதிமுக சட்டமன்ற கூட்டத்தில் முடிவு ..?

நாளை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

மேலும் படிக்க..

9:21 AM IST

சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு பற்றி ஆலோசனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

8:57 AM IST

கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஹாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு மாலத்தீவு போஸ், ஓவர் கிளாமர் போஸ் என தன் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டா, ட்விட்டில் தட்டி விட்டு வருகிறார்.

மேலும் படிக்க..கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

8:55 AM IST

அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு

ஒளிபரப்பான சில மாதங்களுக்கு கலர்ஸ் தமிழ் மீரா நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ சமீபத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு

8:41 AM IST

திமுகவிற்கு எதிராக அடுத்த ஊழல் புகார்...! கவர்னரை 21 ஆம் தேதி சந்திக்க அண்ணாமலை திட்டம்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்துக்கு செல்வோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...
 
8:38 AM IST

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று நடைபெறும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

8:34 AM IST

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
8:31 AM IST

Paracin Open 'A' 2022 செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!

8:26 AM IST

விமான நிலையத்தில் தள்ளாடிய ஏக்நாத் ஷிண்டே... இது தான் காரணமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் பிளவை ஏற்படுத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கடந்த மாதம் 20 ஆம் தேதி சூரத்துக்கு அழைத்துச் சென்றார். மேலும் படிக்க

7:54 AM IST

கலவரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் நடத்திய பெண்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டோஸ் இதோ!

புரட்சிக்கு இடையில்  ஹசிந்தரா  என்ற ஒரு பெண் சுற்றுலா பயணி போல ஜனாதிபதி மாளிகை  முன் நிற்கும் கார்கள் மற்றும் மாளிகைக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க...கலவரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் நடத்திய பெண்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டோஸ் இதோ!

7:53 AM IST

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

7:44 AM IST

தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை சுமார் ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.

11:45 PM IST:

இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-இல் இருந்து 700 ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்து 2019 வாக்கில் யூனியன் பிரதேசமாக மாறியது. இதைத் தொடர்ந்து அங்கு இன்னும் சட்டசபை அமையாமல் உள்ளது. இதன் காரணமாக எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறையும். தற்போது எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708 ஆக உள்ள நிலையில், இது 700 வரை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் படிக்க...

5:31 PM IST:

துணை குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

5:19 PM IST:

கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

5:16 PM IST:

கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கபட்டுள்ளது.  மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
5:35 PM IST:

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி வீடியோ பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்கு நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

4:38 PM IST:

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 900 போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்தனர். சின்னசேலம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் நிலவுவதால் வேப்பூர் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலத்திலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் வேப்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. 

4:18 PM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேரை கைது செய்துள்ளதாக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் வெடித்த வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

4:14 PM IST:

இவர் சமீபத்தில் நடித்த 'தி வாரியர்' ஜூலை 14 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை  பெற்றது.

மேலும் படிக்க...வணங்கான் நாயகி கிருத்திஷெட்டியின் அட்வைஸுடன் கூடிய ஹாட் போஸ் !

3:45 PM IST:

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி , வன்முறையில் 17 காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறையினரால் எடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வன்முறை மூண்டது என்று அவர் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் அதிகரித்ததாகவும் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.மேலும் படிக்க

3:40 PM IST:

15 தினங்களுக்கு முன் நானே மாறனை தொலைபேசியில்  ஸ்பெஷல் சோ பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி, என்னை திருத்தி மக்களை நான் ஏமாற்றுவதை தடுத்து இருக்கலாம் என கூறியுள்ளார் பார்த்திபன்.

மேலும் படிக்க..இரவின் நிழல் முதல் "Non Linear" படம் இல்லை..ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலளித்த பார்த்திபன்!

3:18 PM IST:

பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  இதனிடையே போராட்டக்காரர்களை அதிரடி படையினர் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
 
3:53 PM IST:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கை கோரிய மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

3:05 PM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.க் கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:36 PM IST:

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:55 PM IST:

 சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

2:15 PM IST:

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

1:43 PM IST:

மாணவியின் மரணத்தில் காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை செயலாளர், டிஜிபி சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

12:55 PM IST:

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
12:44 PM IST:

ஏற்கனவே கமலஹாசனின் பிறந்தநாள் அன்று தனது திட்டத்திற்கான ஒன்லைனை கூறிவிட்டார் இயக்குனர். எனவே சீயான் படம் முடிந்த கையோடு கமலின் படத்தை இயக்குவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க...ஒரிஜினல் கே.ஜி.எஃப்பில் தயாராகும் சீயான் 61..கமல் நெக்ஸ்ட் குறித்து துணுக்கு கொடுத்த பா ரஞ்சித்

12:37 PM IST:

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் வெடித்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் அடித்து நொறுக்கியுள்ளன. மேலும் டிராக்டர் கொண்டும் தீ வைத்தும் பள்ளி வாகனங்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னை சேலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

12:23 PM IST:

சிங்கப்பூர் ஓபன் 2022 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் சீனாவின் வாங் சியி-யை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் 21-9 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்ற பிவி சிந்து, 2-வது செட்டில் 11-21 என தோல்வியுற்றார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-15 என வென்று வெற்றி வாகை சூடினார்.மேலும் படிக்க

1:04 PM IST:

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்ப உள்ளதாகவும், ஒரு வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவமனை தகவல்

மேலும் படிக்க..

12:21 PM IST:

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

12:14 PM IST:

மாணவி இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும். வன்முறைகளை ஒடுக்க கூடுதல் காவலர்களை கேட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

12:08 PM IST:

 கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பேசிய அவர், போராட்டத்தை நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது. கலவரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்றப் பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

11:48 AM IST:

சூர்யா மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முந்தைய வெற்றி படமான 24 படத்தின் இயக்குனர் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

11:43 AM IST:

தற்போது தமன்னா தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அதேபோல கன்னட ட்ரெய்லரை நடிகை ராய் லட்சுமி வெளியிடுகிறார்.

மேலும் படிக்க...ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..

12:20 PM IST:

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து  வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

11:43 AM IST:

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் , காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் , அதனை கட்டுபடுத்த காவல்துறயினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
11:25 AM IST:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. போர்க்களமாக மாறிய சென்னை - சேலம் நெடுஞ்சாலை.. போலீஸ் துப்பாக்கிச்சூடுதனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம். பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

11:09 AM IST:

இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-இல் இருந்து 700 ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:07 AM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் பள்ளிக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. உறவினர்கள் போராட்டத்தினால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை போர்களமாக காட்சியளிக்கிறது. 
 
10:59 AM IST:

காவரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒகனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், அதனை சுற்றியுள்ள 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1.24 லட்சம் கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. 

10:35 AM IST:

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

10:13 AM IST:

நயன்தாராவின் ரோல் வேறு தன்னுடைய கதாபாத்திரம் வேறு எனக் கூறியுள்ளார். நயன்தாராவின் ரோல் தான் நடித்த கதாபாத்திரம் போன்றது அல்ல. நான் பஞ்சாபில் வசிக்கும் பிகாரி பெண்ணாக நடித்துள்ளேன்.  பேசும் விதம் கூட வேறு மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க...'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !

10:10 AM IST:

தற்போது 'தரங்கிணி' பாடல் வெளியாகியுள்ளது. தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சர்தாக் கல்யாணி, மீரா செங்குத்தா ஆகியோர் பாடியுள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

மேலும் படிக்க...விக்ரமின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாகும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!

10:07 AM IST:

நாளை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

மேலும் படிக்க..

9:22 AM IST:

சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு பற்றி ஆலோசனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

8:57 AM IST:

தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஹாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு மாலத்தீவு போஸ், ஓவர் கிளாமர் போஸ் என தன் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டா, ட்விட்டில் தட்டி விட்டு வருகிறார்.

மேலும் படிக்க..கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

8:55 AM IST:

ஒளிபரப்பான சில மாதங்களுக்கு கலர்ஸ் தமிழ் மீரா நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ சமீபத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு

8:41 AM IST:

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்துக்கு செல்வோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...
 
8:38 AM IST:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று நடைபெறும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

8:34 AM IST:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
8:31 AM IST:

Paracin Open 'A' 2022 செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!

8:26 AM IST:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் பிளவை ஏற்படுத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கடந்த மாதம் 20 ஆம் தேதி சூரத்துக்கு அழைத்துச் சென்றார். மேலும் படிக்க

7:54 AM IST:

புரட்சிக்கு இடையில்  ஹசிந்தரா  என்ற ஒரு பெண் சுற்றுலா பயணி போல ஜனாதிபதி மாளிகை  முன் நிற்கும் கார்கள் மற்றும் மாளிகைக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க...கலவரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் நடத்திய பெண்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டோஸ் இதோ!

7:53 AM IST:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

7:44 AM IST: