சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?
இந்தியாவில் விரைவில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-இல் இருந்து 700 ஆக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை அமையாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு: மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !
எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறைய இருப்பதை அடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் மட்டும் இன்றி மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு மற்றும் அதே நேரத்தில் மாநில சட்டசபை மற்றும் டில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேச சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில், எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு: குடியரசு துணை தலைவர் தேர்தல்.. பாஜக வேட்பாளர் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்து 2019 வாக்கில் யூனியன் பிரதேசமாக மாறியது. இதைத் தொடர்ந்து அங்கு இன்னும் சட்டசபை அமையாமல் உள்ளது. இதன் காரணமாக எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறையும். தற்போது எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708 ஆக உள்ள நிலையில், இது 700 வரை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்துடன் பெருக்கி கிடைக்கும் எண்ணால் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு தொகை அந்த மாநிலத்தின் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு ஆகும்.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். 4,11,90,000/234000= 176. அந்த தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளிக்கும் வாக்கின் மதிப்பு 176 ஆகும். தமிழ்நாட்டின் 234 எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 41 ஆயிரத்து 184 ஆகும்.