மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !
துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க ஆளுநரும், ராஜஸ்தானை சேர்ந்தவருமான ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டா இன்று அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. தற்போது துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க ஆளுநரும், ராஜஸ்தானை சேர்ந்தவருமான ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டா இன்று அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!
யார் இந்த ஜெகதீப் தங்கர் ? ஒரு விவசாயியின் மகனாக பிறந்து தற்போது மேற்குவங்க ஆளுநராக உயர்ந்துள்ளார். இவரை பற்றி இந்த பதவில் பார்க்கலாம். 1951ம் ஆண்டு மே 18 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கித்தானா என்ற கிராமத்தில் பிறந்தார். அங்குள்ள பள்ளியில் படித்த அவர், பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். திடீரென அவர் அரசியலில் குதித்தார். ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989 - 1991ல் ஜனதா தள கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
பின்னர்,1993-98ல் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து ராஜஸ்தானின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார். இவரை குடியரசு துணை தலைவர் வேட்பாராளராக பாஜக அறிவித்ததுக்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநருக்கும் அப்படியொரு ஏழாம் பொருத்தம்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !
கடந்த சட்டசபைத் தேர்தல் முடிந்த சமயத்தில், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பானர்ஜி சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் கடும் கோபத்தில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி முடக்கி உத்தரவிட்டுள்ளதாக தகவலை தெரிவித்து மம்தாவுக்கு திகிலை காட்டினார் இவர். அதுமட்டுமின்றி இவர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதமர் மோடிக்கு எதிராக உள்ள ஜாட் சமுதாயத்தினரை தன் பக்கம் திருப்ப இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட ட்விட்டர் பதிவில், ‘ ஜெகதீப் தன்கருக்கு நமது அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றிய சிறந்த ஞானம் உள்ளது. அவர் நாடாளுமன்ற விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். மாநிலங்களவையில் அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !