Asianet News TamilAsianet News Tamil

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. பாஜக வேட்பாளர் அறிவிப்பு

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் அறிவிப்பு

Jakdeep Dhankar announced as the Republican Vice Presidential candidate of the BJP alliance
Author
First Published Jul 16, 2022, 8:24 PM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jakdeep Dhankar announced as the Republican Vice Presidential candidate of the BJP alliance

மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!

இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கான கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 775 எம்பிக்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !

Jakdeep Dhankar announced as the Republican Vice Presidential candidate of the BJP alliance

குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. தற்போது துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க ஆளுநர், ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !

Follow Us:
Download App:
  • android
  • ios