விக்ரமின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாகும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!
தற்போது 'தரங்கிணி' பாடல் வெளியாகியுள்ளது. தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சர்தாக் கல்யாணி, மீரா செங்குத்தா ஆகியோர் பாடியுள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, பா. ரஞ்சித்துடன் புதிய படமாகியவற்றில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். இதற்கிடையே திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று திரும்பிய விக்ரமை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
உடல்நிலை காரணமாக சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கோபுரா ஆடியோ லான்ச்சிற்கு கெத்தாக களம் இறங்கி இருந்தார் சீயான். இதை அடுத்து கோபுரா படத்தின் ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 'தரங்கிணி' பாடல் வெளியாகியுள்ளது. தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சர்தாக் கல்யாணி, மீரா செங்குத்தா ஆகியோர் பாடியுள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்
படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலுடன் நாயகி ஸ்ரீநிதி செட்டியின் கிளிப்ஸ் வெளியாகி உள்ளது. அதில் கருப்பு வண்ண கிளாமர் சேலையில் நாயகியின் அழகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவுடன் 'எங்களது ஸ்பார்க்' என குறிப்பிட்டு சோனி மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து வரும் இந்த படத்தை ஆர் அஜய் ஞானமுத்து எழுதிய இயக்கி வருகிறார். தமிழ் ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரமுடன் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் கே எஸ் ரவிக்குமார் துணை வேடத்தில் தோன்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
இந்த படத்தின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் பதன் உள்ளிட்டோர் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன் , புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டங்கையும் கவனித்து வருகின்றனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதற்கென வெளியிடப்பட்ட போஸ்டர்களும் அப்போது வைரலாகின.