திமுகவிற்கு எதிராக அடுத்த ஊழல் புகார்...! கவர்னரை 21 ஆம் தேதி சந்திக்க அண்ணாமலை திட்டம்
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்துக்கு செல்வோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுக- பாஜக இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. திமுக அரசு பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றதாக கூறி ஏற்கனவே தமிழக ஆளுநரை சந்தித்து பாஜக புகார் அளித்து இருந்தது. குறிப்பாக முதலமைச்சர் துபாய் பயணத்தில் முறைகேடு, கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரில் மோசடி, மின் வாரியத்தில் மோசடி என தொடர் புகார்கள் கூறியிருந்தது. இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்திய மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மக்கள் கண்டிப்பாக எம் எல் ஏவின் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் எனவும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும், உறுப்பினர்க்கும் என மூவரும் இனைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.
உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்
போலி பாஸ்போர்ட் முறைகேடு
தமிழகத்தில் நடைபெற்றுள்ள பாஸ்போட் ஊழல் தொடர்பாக ஆளுநரை சந்தித்திக்க இருப்பதாகவும் அதற்கான தகவல்களை கொடுக்க இருப்பதாகவும் கூறினார். மதுரை அவனியாபுரம் பகுதியில் 65பேருக்கு போலியான பாஸ்போட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விமான அதிகாரி ஒருவரின் பெயரில் பல பாஸ்போட் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த முறைகேடு தொடர்பாக வரும் 21ம் தேதி ஆளுநரிடம் தகவல்களை கொடுக்க உள்ளதாக கூறினார். இது நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயம் எனக்கூறியவர், ஆனால் தமிழக முதல்வர் பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம்சாட்டினார். எந்த ஆட்சியில் இந்த ஊழல் நடைபெற்று இருந்தாலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வருகிற 21ம் தேதி பாஸ்போட் ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் கொடுக்கபடும் ஆதாரத்தின் அடிப்படையில் தமிழக டிஜிபி சிலரை பதவி நீக்க்ம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என குறிப்பிட்டார்.
மாணவி செத்து 3 நாள் ஆச்சு... அன்பில் மகேஷ் சும்மா விட மாட்டோம்.. திமுக அரசை திகிலாக்கும் அண்ணாமலை.
ஆளுநரிடம் புகார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் இந்நிகழ்விற்கு பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார். ஒலிம்பியாட் போட்டியினை தமிழக முதல்வர் முதன்மை படுத்த வேண்டியது முதல்வரின் கடமை என தெரிவித்தார். திருப்பூரில் செல்பி வித் அண்ணா நிகழ்விற்கு பதிலளித்த அவர், கல்லூரியில் அனுமதி இல்லாமல் எந்த நிகழ்வும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்துயுள்ளேன் ஆனால் இதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்தவர், கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது எனது கருத்து என கூறினார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது என்றும் பாஜக மற்ற கட்சியின் விவகாரத்ததில் தலையிடாது என கூறினார். பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் நல்ல உறவு உள்ளது என தெரிவித்தவர், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவருடனும் நல்ல உறவு உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !