ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..
தற்போது தமன்னா தெலுங்கு டிரைலரை வெளியிட்டுள்ளார். அதேபோல கன்னட ட்ரெய்லரை நடிகை ராய் லட்சுமி வெளியிடுகிறார்.
பிரபல சரவணா ஸ்டோர் விளம்பரத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் லெஜண்ட் சரவணன் அரு.ள் முன்னணி கதாநாயகிகளை வைத்து விளம்பரங்களை தயாரித்து நடித்த இவர் பல விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது கதாநாயகனாகவும் ஆகிவிட்டார். தனது சொந்த தயாரிப்பில் தி லெஜெண்ட் என்னும் படத்தை உருவாக்கியுள்ளார் சரவணன் அருள்.
மேலும் செய்திகளுக்கு...'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுடேலா நாயகியாக வருகிறார். அறிவியல் புனைக்கதை த்ரில்லராக உருவாகி வரும் இதன் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு மே 29ஆம் தேதி நடந்தது. இந்த படம் வரும் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய சிறப்பே மறைந்த பிரபல நடிகர் விவேக் இந்த படத்தில் நடித்துள்ளது தான். ரசிகர்கள் மீண்டும் சின்ன கலைவாணரை திரையில் காண்பதற்கு ஆவலாக உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரமனின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாலும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இதில் லெஜன்ட் சரவணன் ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஏழை விவசாயிகளிடமிருந்து பரிபோகும் நிலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் இறங்குகிறார் நாயகன். இதில் ஊர்வசி ரவுடேலா நுண்ணுயிரியல் நிபுணராக நடிக்கிறார். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் கீர்த்திகா திவாரி, பிரபு, ரோபோ சங்கர், நாசர், விஜயகுமார், கோவை சரளா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக்கின் மறைவை அடுத்து இதில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படத்தில் முன்னதாக நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பட குழு முயற்சி செய்திருந்தது. ஆனால் சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்கு பிறகு பல நடிகைகளின் மார்க்கெட் குறைந்ததாக பேசப்படுவதால், முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதற்கு சம்பந்தம் தெரிவிக்கவில்லை என பேசப்படுகிறது. இதன் காரணமாக தான் பாலிவுட்டில் இருந்து நாயகியை படக்குழு இறக்கி உள்ளதாக பேசப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்
இந்நிலைகள் கடந்த மாதம் நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தமிழ் முன்னணி ஹீரோயின்கள் களமிறக்கப்பட்டு இருந்தனர். தற்போது தமன்னா தெலுங்கு டிரைலரை வெளியிட்டுள்ளார். அதேபோல கன்னட ட்ரெய்லரை நடிகை ராய் லட்சுமி வெளியிடுகிறார். இது குறித்து பதிவிட்டுள்ள தமன்னா "லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் 'தி லெஜெண்ட்' தெலுங்கு ட்ரெய்லர் இதோ. அதை வெளியிடுவதில் மிகுந்த உற்சாகமாக உள்ளது. பான் இந்திய பட குழுவிற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.