விமான நிலையத்தில் தள்ளாடிய ஏக்நாத் ஷிண்டே... இது தான் காரணமா?
மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மது போதையில் தள்ளாடியபடி வந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் பிளவை ஏற்படுத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கடந்த மாதம் 20 ஆம் தேதி சூரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்து எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் அசாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏத்நாத் ஷிண்டே அடிக்கடி குஜராத் மாநிலத்துக்கு வந்து சென்று கொண்டு இருந்தார்.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை செய்து விட்டு சென்றார். இந்த சமயத்தில் தான் சூரத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் உடன் அசாம் சென்ற போது விமான நிலையத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். விமான நிலையத்துக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தடுமாறிய நிலையில் வருவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வைரல் வீடியோ:
இந்த வீடியோ பிரபர வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சிகளின் படி ஏக்நாத் ஷிண்டே சரியாக நடக்க முடியாமல் இருப்பது, பத்திரிகையாளர்கள் இடம் பேச முடியாதது போன்றே அவரின் செயல்பாடுகள் இருந்தது. இதை அடுத்து ஏக்நாத் ஷிண்டே மது போதையில் இருந்தாரா என்ற கேள்வி எழுந்தது.
“ஏக்நாத் ஷிண்டே இரண்டு நிமிடங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இருந்தார். இதில் சில நொடி காட்சிகளை மட்டும் கோர்வையாக எடிட் செய்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் மர்ம நபர்கள் வெளியிட்டு உள்ளனர்,” என ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர். பயணம் செய்த களைப்பு காரணமாக அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மறுப்பு:
இது மட்டும் இன்றி பத்திரிகையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக குவிந்து கொண்டு கேள்வி கேட்ட காரணத்தால் கூட அவசரத்தில் அவரால் பதில் சொல்ல முடியாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இதோடு ஏக்நாத் ஷிண்டே மது போதையில் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அவரின் ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.
ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வீடியோவை முழுமையாக பார்க்கும் போது, அவர் மது போதையில் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் என ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் மேலும் தெரிவித்தனர்.