எங்களை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.. நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.. பள்ளி செயலாளர் வீடியோ
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி வீடியோ பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்கு நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி வீடியோ பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்கு நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளின் அசல் சான்றிதழ்கள், உடைமை உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரவு பகல் பாராமால் காவல்துறையின் விசாரணை முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க:கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..
மேலும் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக கேட்கப்படும் அனைத்து கேள்விக்களுக்கும் வெளிப்படையாக பதில் அளித்து வருவதாகவும் பள்ளியின் சிசிடிவி கேமிரா பதிவுகள் அனைத்தும் காவல்துறயிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவியின் தாயார் பள்ளி செயலாளரை சந்திக்க அனுமதிக்கபடவில்லை என்று குற்றச்சாட்டிய நிலையில், அன்று காவல்துறை விசாரணையில் இருந்ததாலே சந்திக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் குழு மூலம் கூடிய கூட்டம்...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வன்முறை தூண்டும் விதமாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன என்று கூறும் அவர், பள்ளியின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவே இன்று மிகப் பெரிய கலவரம் வெடிப்பதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் படித்தவர்கள் ஏராளமானோர் நல்ல பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை குறித்து வதந்திகளை பரப்பி, வன்முறையை தூண்டியுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து எரித்தும் உள்ளனர். மேலும் மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்து எரிக்கபட்டு, 3500 மாணவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு.. காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம்..
கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கபட்டுள்ளது. மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.