கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி , வன்முறையில் 17 காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறையினரால் எடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வன்முறை மூண்டது என்று அவர் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் அதிகரித்ததாகவும் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி போராடத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது கலவரமாக மாறியுள்ளது. பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் குழு மூலம் கூடிய கூட்டம்...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முன்னூரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே போராட்டக்காரர்களை அதிரடி படையினர் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வாட்ஸஆப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி , வன்முறையில் 17 காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறையினரால் எடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வன்முறை மூண்டது என்று அவர் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் அதிகரித்ததாகவும் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.இதனிடையே டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சேலம் நெடுஞ்சாலையில் அண்டை மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சின்னசேலத்தில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அதிரடிப்படை கலைத்து வருகிறது.சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுக்காக்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.