நாளை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாளை குடியரசு தலைவர் தேர்தல்
15 வது குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் இறக்கபட்டுள்ளார். கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை வந்த யஷ்வந்த் சின்கா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !

திமுக- அதிமுக கூட்டம்
முன்னதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, கொரோனா தொற்று காரணமாக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதே போல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவிற்க்கு வாக்களிப்பது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுள்ளது. மேலும் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும் அதிமுக சட்டமன்ற கட்சி துணைத்தலைவராக நத்தம் விஸ்வநாதனை நியமித்தும் முடிவுவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகளை சட்டசபை சபாநாயகரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்க உள்ளனர்.
