அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டத்தை பதிவுசெய்துள்ளனர்.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் அதிமுகவின் பொருளாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகளை நீக்கியும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ், கட்சி விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு செல்லாது என கோரி ஓபிஎஸ் முறையிட்டுள்ளார்.
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !

முதலமைச்சர் பதிவிற்கு அதிமுக எதிர்ப்பு
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை தேறி வர வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவிட்டிருந்தார். இதனையடுத்த ஒரு சில தினங்களில் ஓ.பன்னீர் செல்வமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டார். அதில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என கூறியிருந்தார். இதற்க்கு இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளரும், ஐடி விங் நிர்வாகியுமான கோவை சத்யன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திமுக அமைப்பு செயலாளர் மு.க. அழகிரியின் சகோதரர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதே போல அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்நோக்கத்தோடு தான் கருத்தை பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்
திமுகவிற்கு எதிராக அடுத்த ஊழல் புகார்...! கவர்னரை 21 ஆம் தேதி சந்திக்க அண்ணாமலை திட்டம்
