மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?
சூர்யா மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முந்தைய வெற்றி படமான 24 படத்தின் இயக்குனர் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நட்சத்திரமான சூர்யா கதாநாயகன், தயாரிப்பாளர் அவதாரங்களை அடுத்து தற்போது வில்லனாக கலக்கி வருகிறார். சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தில் மாஸ் லுக்கில் தோன்றியிருந்தார்ஸ் சூர்யா. கிளைமாக்ஸில் 10 நிமிடங்கள் தோன்றியிருந்தாலும் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்துவிட்டார் ரோலக்ஸ்.
விக்ரம் படத்தில் இவரது ரோல் தான் பெரிதாக பேசப்பட்டது. ரசிகர்களின் புகழாரத்தை சூட்டிக்கொண்ட சூரிய நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்திருந்த கமல் தம்பிக்கு சிறிய பாத்திரத்தை கொடுத்து விட்டோம். மீண்டும் மிகப்பெரிய திட்டத்தில் இருவரும் இணைவோம் என பதிவிட்டிருந்தார். அதோடு சூர்யாவிற்கு அன்பு பரிசாக விலை உயர்ந்த கடிகாரத்தையும் கொடுத்தார் உலகநாயகன்.
மேலும் செய்திகளுக்கு... ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..
இந்நிலையில் சூர்யா மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முந்தைய வெற்றி படமான 24 படத்தின் இயக்குனர் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தை சூர்யாவின் 2 டி தயாரித்திருந்தது. இதில் சமந்தா, பிரபு, நித்தியா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். திரு ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 2016 மே 6ஆம் தேதி வெளியான இந்தப் படம் 100 கோடி வரை வசூலை பெற்றிருந்தது. படத்தின் பட்ஜெட் 70 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு...'நான் நயன்தாரா இல்லை'..ஒப்பீடு குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவியின் மகள் !
காலப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் புனைக்கதையான இந்த படத்தில் சூர்யா மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இதில் நாயகன், வில்லன் என இரண்டு ரோலிலும் சூர்யா தான் நடித்திருந்தார். இந்த படம் 64 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவம் உள்ளிட்ட இரண்டு விருதுகளை தட்டி சென்றது. அதோடு ஃபிலிம் ஃபேர் விருதுகளில் விமர்சனகளின் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்று இருந்தார். 6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...விக்ரமனின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாலும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி கோவா போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.. இதற்கிடையே இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் பிரமாண்டமான முறையில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் தற்போது கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி பழக்கி வருகிறார். அது குறித்தான வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகின.