Tamil News live : திமுக தொடர் வெற்றியை தாங்க முடியாமல் ஈபிஎஸ் பொய் புகார்: ஆர்.எஸ்.பாரதி
சுருக்கம்
திமுக தொடர்ந்து வெற்றிபெற்று வருவதை தாங்க முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டு கூறி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.
Cobra Trailer : இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சியான் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதை அடுத்து இணையதளத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிமுக தலையை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்... ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு
அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க
05:27 PM (IST) Aug 25
director mani nagaraj passes away : ஜிவி பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்!
இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் மணி நாகராஜ். இவர் பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
கலெக்டர் ஆபீஸ் கடை ஒதுக்கீட்டில் செம்ம கலெக்ஷன்.?? அமைச்சர் அன்பரசன் கை காட்டியவர்களுக்கே கடை.. செம்ம உள்ளடி.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைய உள்ள கடைகள் அமைச்சர் தா,மோ அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியாவது கடையை பெற வேண்டுமென கட்சிக்குள்ளாக முயற்சித்து வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளது தெரிகிறது. மேலும் படிக்க
04:51 PM (IST) Aug 25
ஆகமத்தின் பெயரால் ஆரியத்தை நிலை நிறுத்த சதி.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தனி சட்டம் இயற்றுங்க.. சீமான் கோரிக்கை
ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
04:50 PM (IST) Aug 25
அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை.. விஜயகாந்துக்கு இளையதளபதி விஜய் வாழ்த்து.. வைரல் ஆகும் மடல்.
விஜயகாந்தின் 70வது பிறந்த நாளான இன்று "அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை" என நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த பழைய கடிதமொன்று வைரலாகி வருகிறது. நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில், விஜய் தெரிவித்த பழைய வாழ்த்து மடல் சமூக வலைதளத்தில் வேகமாப பரவி வருகிறது. மேலும் படிக்க
04:49 PM (IST) Aug 25
அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மனித நேயமிக்கவர் கேப்டன்.. உருகிய பிரேமலதா விஜயகாந்த்.
கேப்டன் விஜயகாந்தை அரசியல் தலைவராக மட்டுமின்ற மனித நேயம் மிக்க நபராக மக்கள் பார்க்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அரசியல் சினிமாவை கடந்து மனிதநேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும் படிக்க
03:40 PM (IST) Aug 25
ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை சிவி சண்முகம் புகார்! அதிமுக அலுவலக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-டிஜிபி
அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..
02:55 PM (IST) Aug 25
இன்றைய இளம் நடிகர்கள் செய்ய யோசிக்கும் ரிஸ்குகளை அசால்ட்டாக எடுத்த விஜயகாந்த்..
இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரும் சின்ன சின்ன சண்டைகாட்சிகளை செய்வதற்கே பயப்படுவதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் மணிக்கூண்டில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !
ஆனால் படத்தை பார்த்த பலரும் நம்ம ஊரு ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் அப்டேட் வர்க்ஷனாக இந்த படம் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக...! தட்டி எழுப்பும் அதிமுக...! எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் ஆறுகுட்டி தாவி உள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சாதாரண தொண்டர்கள் என்னை சந்திக்கலாம். இனி முதல்வரின் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூட ஆறுகுட்டியால் நெருங்க முடியாது கூறினார்.
Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!
விஜயகாந்த் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற டாப் 10 IMDB ராக்கிங் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
01:22 PM (IST) Aug 25
ஒரே இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்த கேப்டன் விஜயகாந்த்! 70 சதவீதம் ஹாட்... முழு விவரம் இதோ..!
நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, ஒரே ஒரு இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்துள்ளார். அந்த இயக்குனர் மற்றும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ..
12:30 PM (IST) Aug 25
அண்ணா பல்கலைகழகத்தில் இந்த கொடுமையா..! திமுக அரசு செய்யும் பச்சை துரோகம்.. டார் டாரா கிழிக்கும் சீமான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
12:29 PM (IST) Aug 25
மாநகராட்சி ஆணையர் பெயரில் பணம் கேட்டு மெசேஜ்..! அலறி துடித்து பணம் கொடுத்த அதிகாரிகள்.. அடுத்து நடந்த டிவிஸ்ட்
மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தனது பிறந்தநாளை கொண்டாட கட்சி அலுவலகம் வந்த விஜயகாந்த்
தனது பிறந்தநாளையொட்டி, தொண்டர்களை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.
12:00 PM (IST) Aug 25
தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது.. இபிஎஸ் தரப்பு வாதம்
ஒன்றரை கோடி தொண்டர்களுக்காக அல்லாமல், ஓபிஎஸ் நலனுக்காக தனிநீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தனி நீதிபதியின் தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது: இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் என இபிஎஸ் தரப்பு வாதம்.
11:27 AM (IST) Aug 25
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்து வருகிறது.
11:25 AM (IST) Aug 25
செப்டம்பர் 15ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம்?
அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.