இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் மணி நாகராஜ். இவர் பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர் பிரபலங்களின் மரணம் திரையுலகையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஜிவி பிரகாஷின் பென்சில் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் மறைவு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆகஸ்ட் 25 அன்று தனது 45 வயதில் காலமானார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் மணி நாகராஜ். இவர் பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் இயக்கத்தில் வாசுவின் கர்ப்பிணிகள் என்னும் படம் உருவாகி வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படம் மலையாளத்தில் வெளியான ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். 

மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்த் டூ கேப்டன் ....காவல்துறைக்கு புகழ் சேர்த்த விஜயகாந்த்.. போலீஸ் வேடத்தில் கலக்கிய மக்கள் நாயகன்

இந்தப் படத்தில் நீயா நானா கோபிநாத், வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படமா வெளியீட்டிற்கு படம் காத்திருக்கும் நிலையில்,இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...என்னை பார்த்தவுடன்.. விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கார்த்தி

இது குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். படத்தின் எடிட்டர் சுரேஷ் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். கௌதம் வாசுதேவின் முன்னாள் கூட்டாளியான திரைப்பட இயக்குனர் மணி நாகராஜ் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன் என எழுதியுள்ளார்.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...இன்றைய இளம் நடிகர்கள் செய்ய யோசிக்கும் ரிஸ்குகளை அசால்ட்டாக எடுத்த விஜயகாந்த்..

என் அன்பு நண்பர் இயக்குனர் மணி நாகராஜ் இனி இல்லை என்று நம்புவது கடினம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷும் தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார். 

Scroll to load tweet…

பாடலாசிரியர் பார்வதி எழுதினார், "பென்சில் இயக்குனர் மணி நாகராஜின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருந்துகிறேன் என எழுதியுள்ளார்.

Scroll to load tweet…