விஜயகாந்தின் 70வது பிறந்த நாளான இன்று "அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை"  என நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த பழைய கடிதமொன்று வைரலாகி வருகிறது. 

விஜயகாந்தின் 70வது பிறந்த நாளான இன்று "அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை" என நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த பழைய கடிதமொன்று வைரலாகி வருகிறது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில், விஜய் தெரிவித்த பழைய வாழ்த்து மடல் சமூக வலைதளத்தில் வேகமாப பரவி வருகிறது.

தமிழகத்தின் தலைசிறந்த ஆக்சன் ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த் தனது சண்டைக்காட்சிகளில் மூலம், அடுக்கு வசனங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் களை உருவாக்கி சிம்மாசனமிட்டு அமர்ந்து உள்ளவர் அவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், அதில் 20க்கும் அதிகமான படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரம் என்றாலே விஜயகாந்த், விஜயகாந்த் என்றாலே போலீஸ் கதாபாத்திரம் ஏற்று பேசும் அளவிற்கு மிக நேர்மையான போலீசாகவும், மக்களுக்கு உதவுகின்ற, நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிற போலீஸ் அதிகாரியாக திரையில் வலம் வந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் விஜயகாந்த்.

பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தவர் விஜயகாந்த், எம்ஜிஆர்க்கு அடுத்து ஏழை எளிய மக்களுக்கு வாரிக் கொடுத்த வள்ளல் விஜயகாந்த் என்றே சொல்லலாம், சினிமா துறையில் அவர் உச்சம் தொட்ட நட்சத்திரம் என்பதைவிட பலரை வாழவைத்த மனிதநேயர் என்றே சொன்னால் மிகையல்ல, அதேநேரத்தில் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்தார், ஆனால் உடல்நலக்குறைவால் விஜயகாந்த்தால் தனது அரசியல் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாத தொய்வு ஏற்பட்டுள்ளது. 

ஆனாலும் நடிகர், அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதநேயர் என அவர்மீதான உணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அவரது 70வது பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் தொண்டர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது, தேமுதிக தலைமை அலுவலகத்தில் குடும்பத்தினர் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினர், ஏராளமானோர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், நடிகர் விஜய் விஜயகாந்துக்கு வாழ்த்துக் கூறி நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஜய், விஜயகாந்த் நடித்த செந்தூரபாண்டி என்ற படத்தில் இணைந்து நடித்தார், அதுதான் விஜய்க்கு சினிமா பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது, இந்நிலையில் விஜயகாந்த் மீது தனி அன்பும் பாசமும் விஜய்க்கு உண்டு என்பதால் பாசமிகு அண்ணன் ஆகவே அவர் கேப்டன் விஜயகாந்தை பாவித்து வருகிறார், இந்நிலையில் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் எழுதிய பழைய வாழ்த்து மடல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில் அன்பு அண்ணா... உன் பிறந்தநாள், அன்பு பிறந்தநாள்.. அன்புக்கு நான் அடிமை இப்படிக்கு அன்பு தம்பி விஜய். என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது, அதை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விஜயகாந்துக்கு வாழ்த்துகூறி வருகின்றனர்.