அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்... ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு .
அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்ற படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திமுக என்ற கட்சி ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இரண்டாகப் பிரிந்து நிற்கிறது, முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, அதில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்பட்டார், பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார், அதேநேரத்தில் ஓபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்: சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த முடிவு... மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!!
அப்போது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் கைகலப்பு மாறி ஒருகட்டத்தில் அது கலவரமாக வெடித்தது, ஏற்கனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர், அப்போது இருதரப்பு ஆதரவாளர்கள்மீதும் தடியடி நடத்திக் கலைத்தனர். ஆனாலும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர், கட்சி நிதி ஆவணங்கள், சிபியூ உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கொண்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்: பீகாரை போல் தமிழகத்திலும் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்- பாரிவேந்தர் ஆவேசம்
பின்னர் இதுதொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்தார், கடந்த மாதம் 23 ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் இந்த புகார் அளித்தார். அதில் அதிமுக அலுவலகத்தை சூறையாடியது மட்டுமின்றி பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், அதிமுக தலைமை அலுவலத்தில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாகவும் எனவே ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்,
இந்நிலையில் சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓபிஎஸ் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலருக்கு ராயப்பேட்டை போலீசார் கொலை மிரட்டல் கணவரும் செய்தல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவது நம்பிக்கை மோசடி கட்சி சொத்துக்களை திருடியது உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .
அதிமுக தலைமை அலுவலகம் நடந்த கலவரம் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக தனித்தனி வாழ்க்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்ற படுவதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.