சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த முடிவு... மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!!
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 29,666 கி மீ நீள நெடுஞ்சாலைகள்.
இதையும் படிங்க: ஆகமத்தின் பெயரால் ஆரிய சூழ்ச்சி.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தனி சட்டம் இயற்றுங்க முதல்வரே.. சீமான்
இதில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5,400 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ100 கோடி வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை தான். ஒப்பந்த நிறுவனங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை சிவி சண்முகம் புகார்! அதிமுக அலுவலக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-டிஜிபி
எனவே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.