பீகாரை போல் தமிழகத்திலும் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்- பாரிவேந்தர் ஆவேசம்

குடும்ப ஆட்சி என்பது எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் என ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரசு பணத்தை பெறக்கூடிய வகையில் இருப்பதே குடும்ப ஆட்சி என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
 

Parivendar has insisted that family rule should be abolished in Tamil Nadu

திராவிட கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரிவேந்தர், ஒரு சிறந்த அரசியல் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் அந்த கட்சி ஒரு உயர்ந்த நிலையை அடைய முடியும் என கூறினார்.  அது போன்ற ஒழுக்கத்தை இந்திய ஜனநாயக கட்சி தொண்டர்களாகிய உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார். ஓழுக்கமற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை விட சில நூறு ஓழுக்கமான தொண்டர்கள் இருந்தாலே போதும் என கூறினார். தொண்டர்களின் 11 வருட உழைப்பு வீணாகி விடக்கூடாது. எனவே கட்சி தலைமை விருப்பத்திற்கு ஏற்ப தொண்டர்களாகிய நீங்கள் கட்சிப் பணியாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். திராவிட கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக  கட்சி தொடங்கியதாக தெரிவித்தவர் குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது என தெரிவித்தார். 

கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக...! தட்டி எழுப்பும் அதிமுக...! எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

Parivendar has insisted that family rule should be abolished in Tamil Nadu

குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்

பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஓழிக்கப்படும், குடும்ப ஆட்சி என்பது எம்எல்ஏ,எம்பி,அமைச்சர் என ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரசு பணத்தை பெறக்கூடிய வகையில் செயல்படக்கூடாது எனவும் தெரிவித்தார். கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் டாக்டர் பாரிவேந்தர் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து,  இந்திய ஜனநாயக கட்சியின் அடுத்த கட்ட முன்னேற்றம் தொடர்பாக டாக்டர் பாரிவேந்தர் கண்ட கனவை நினைவாக்கும் வகையில், தொலை நோக்கு பார்வையுடன் இக்கட்சியை நாடேங்கும் எடுத்து செல்லும் பொறுப்பை மேற்கொள்வேன் என கூறினார். கட்சியில் இருந்து விலகியவர்கள் போனால் போகட்டும். ஐஜேகே ஓர் தேசிய கட்சி திமுகவிற்கு மேல் நாம் உள்ளதாக தெரிவித்தவர், நாம் கோவில் யானைகள் அல்ல கும்கி யானை,  கட்சி எப்படி நடத்துவது என பிற கட்சிக்கு நாம் வழி காட்டுவோம் என கூறினார்.

இதையும் படியுங்கள்

நெருக்கடி கொடுத்து அதிமுகவினரை அபகரிக்கும் திமுக.! ஸ்டாலின் செயல் சர்வாதிகார போக்கின் உச்சம்- ஆர்.பி.உதயகுமார்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios