நெருக்கடி கொடுத்து அதிமுகவினரை அபகரிக்கும் திமுக.! ஸ்டாலின் செயல் சர்வாதிகார போக்கின் உச்சம்- ஆர்.பி.உதயகுமார்

அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து தன் அருகில் வைத்துக்கொண்டே அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்
 

RB Udayakumar has accused Tamil Nadu Chief Minister Stalin of working with dictatorial tendencies

திமுகவில் அதிமுக நிர்வாகிகள்

திமுகவை விமர்சிக்க அதிமுகவிற்கு தகுதி இல்லையென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடியார் ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாது, அம்மா திட்டங்களுக்கு மூடு விழா, 150 சகவீத சொத்து வரி உயர்வு, 52 சகவீத மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீரழிவு, காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்று ஆதாரத்துடன் புள்ளிவிபரத்துடன் தொடர் அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார், ஆட்சியின் அவல் நிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு, ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் நான் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன் என்று கூறுகிறார், ஆனால் தற்போது  அதிமுக கேள்வி கேட்பதற்கு எந்த தகுதி இல்லை என்று கூறியுள்ளார்,அதிமுகவில் பயிற்சி பெற்று, அதனால் வாழ்வு பெற்று, அதிகாரம் பெற்று, தன் கையில் பச்சை குத்தி கொண்டு இருந்தவர்களை காலத்தின் கோலத்தால், தொண்டர்களின் உழைப்பால் கோபுர கலசத்தில் உயர்ந்தவர்களை நீங்கள் அபகரித்ததை  என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும், 

RB Udayakumar has accused Tamil Nadu Chief Minister Stalin of working with dictatorial tendencies

சர்வாதிகார பாதையில் ஸ்டாலின்

உதாரணமாக எ.வ. வேலுவில் தொடங்கி செல்வகணபதி, கே எஸ் எஸ் ஆர், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கம்பம் செல்வேந்திரன், சத்தியமூர்த்தி, தென்னவன், ரகுபதி,பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் தற்போது செந்தில் பாலாஜி வரை பட்டியலிட்டு சொல்ல முடியும் தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்தவர்களை, நெருக்கடி கொடுத்து அபகரித்து தன் அருகில் வைத்துக் கொண்டு, அதிமுக கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது என்று முதலமைச்சர் கூறலாமா? அதிமுக 50 ஆண்டுகால பொன்விழாவில், 30 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்காக சேவை செய்தது,  புரட்சித்தலைவர் இருக்கும் பொழுது திமுகவை கோட்டை பக்கம் வராமல் தோல்வியைதான் பரிசாக வழங்கினார், ஏழு முறை ஆட்சி செய்த இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர், அதனை தொடர்ந்து எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழிவோடும் பொலிவோடும் நடத்தி வருகிறார்,அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கி விட்டாரா என்ற கேள்வி வருகிறது, 

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..! அதிமுகவிற்கு தலைமை யார் என பின்னர் முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்

RB Udayakumar has accused Tamil Nadu Chief Minister Stalin of working with dictatorial tendencies

திமுகவில் அதிகார போட்டி

திமுகவில் பயிற்சி பெற்றவர்களை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்யவில்லை, முதலமைச்சர் அதிமுகவை விமர்சனம் செய்தது கழகத் தொண்டர்கள் எல்லாம் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர், பத்தாண்டு காலம் எதிர் கட்சியாக திமுக இருந்த பொழுது அம்மாவும் சரி, எடப்பாடியாரும் சரி எதிர்கட்சிக்குரிய மரியாதையை வழங்கினார்கள், இன்றைக்கு 48 ஆண்டுகால பொது வாழ்கையில் எடப்பாடியார் உங்களைப் போன்ற தந்தையின் மடியில் தவழ்த்து அதிகாரம் பெறாமல் தன் தியாகத்தால், உழைப்பால், விவாசத்தால் கிளை கழகம் தொடங்கி முதலமைச்சர் ஆனார், தற்போது இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ,மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எடப்பாடியார் கேட்கிறார், ஆனால் அதற்கு முதலமைச்சர் அதிமுகவில் அதிகார போட்டி என்று முழு பூசணிக்காய் போற்றில் மறைக்க வண்ணம் பொத்தாம் பொதுவாக பேசுகிறார் ,திமுகவிலும் அதிகார போட்டி இருந்தது ஏன் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் அதிகார போட்டி இல்லையா, அதேபோல் வைகோ அதிகார போட்டியில் இருந்து  திமுகவில் இருந்து செல்லவில்லையா,  பேறிஞர் அண்ணா காலம் தொடங்கி எத்தனை அதிகார போட்டிகள் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியாதா? முதலமைச்சர்  ஏகடிகமாக பேசுகிறார், 

இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு ஒரு மணி நேரம் தான் வாய்ப்பு...! பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

RB Udayakumar has accused Tamil Nadu Chief Minister Stalin of working with dictatorial tendencies

கொங்கு மண்டலம் கூட்டத்தின் ரகசியம் என்ன..?

இன்றைக்கு ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியார் உள்ளார், நீங்கள் கொங்கு மண்டலம் சென்றபோது  ,அங்கே கூட்டத்தை கூட்ட நீங்கள் செய்த ரகசியங்களை நடுநிலை நாளிதழ்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி உள்ளது ஆனால் இன்றைக்கு எடப்பாடியாரும் சென்றார் அங்கு இயற்கையான கூட்டம் கூடியது, எடபாடியார் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலை, அறிந்த பதிலை கூறவேண்டும் ஆனால் ஜனநாயக கடமை ஆற்றாமல் முதலமைச்சர் முதல், அமைச்சர்கள் வரை ஏகடியும் பேசுவதை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது பேசிய நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்? உங்கள் இது போன்ற பேச்சை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்...! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios