இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு ஒரு மணி நேரம் தான் வாய்ப்பு...! பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இபிஎஸ் தொடங்கிய மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
 

The AIADMK general committee case will be heard in the Madras High Court today

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் 23 ஆம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை அதிமுக மூத்த நிர்வாகிகளால் நிராகரிப்பட்டது. தமிழ் மகன் உசேன் அதிமுக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.  மேலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.  ஓபிஎஸ் எதிர்ப்புக்கு மத்தியில் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று இருந்த சட்டப்பிரிவு திருத்தப்பட்டது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே தொடர வேண்டுமென தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள்.. டிஜிபி சைலேந்திர பாபு ‘திடீர்’ விளக்கம் !

The AIADMK general committee case will be heard in the Madras High Court today

இபிஎஸ் மேல் முறையீடு- இன்று விசாரணை

மேலும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.  மேல்முறையீட்டு வழக்கு தனது தரப்பு வாதங்களை கேட்ட பிறகு எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!

The AIADMK general committee case will be heard in the Madras High Court today

ஒரு மணி நேர வாய்ப்பு

 இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில்  தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு கிடைக்காத காரணத்தால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை இன்றை தினம் ஒத்திவைத்துள்ளார். இன்று நடைபெறவுள்ள விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கு  வாதம் செய்ய ஒரு மணி நேரம் நீதிபதி அவகாசம்  வழங்கியுள்ளதாகவும், வாதத்தை கூடுதல் நேரங்களும் ஒதுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய தினம் நடைபெறவுள்ள வாதம் இறுதி வாதமாக கூட இருக்கலாம் என தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios