11:30 PM (IST) Feb 19

டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு

2025 டெல்லி தேர்தலில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதன்கிழமை டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குடும்பப் பின்னணி ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க: டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

08:15 PM (IST) Feb 19

டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு!!

Scroll to load tweet…
07:13 PM (IST) Feb 19

மாறுகிறதா உலக அரசியல்? உக்ரைன் விஷயத்தில் டிரம்ப் அதிரடி!!

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை; ரஷ்யாவுடன் கைகோர்த்த டிரம்ப்; மாறுகிறது உலக அரசியல்!!

06:57 PM (IST) Feb 19

இந்தியாவை வளைக்க ரஷ்யா, அமெரிக்கா போட்டா போட்டி!!

F35 vs SU57 | ரஷ்யாவா? அமெரிக்காவா? இந்தியாவுக்கு நெருக்கடியா?

05:43 PM (IST) Feb 19

மகாகும்பமேளாவில் புனித நீராடிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்!

Pawan Kalyan Takes Holy Dip at Prayagraj Mahakumbh 2025 : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளார். இதை தனது வாழ்க்கையின் ஒரு புனிதமான தருணமாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க

04:53 PM (IST) Feb 19

675 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே வந்து மகா கும்பமேளாவில் நீராடிய அப்பா – மகள்!

Mahakumbh Mela 2025 : மகாகும்பம் 2025: 144 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரிய சந்தர்ப்பத்தில், தந்தை மகள் இருவரும் 675 கி.மீ சைக்கிளில் பயணித்து சங்கமத்தில் புனித நீராடினர்.

மேலும் படிக்க

03:48 PM (IST) Feb 19

சோகத்தில் இந்திய அணி; மோர்னே மோர்கல் தந்தை மறைவு!

Morne Morkel Father Passed Away : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடங்கி நடைபெற்று வுரும் நிலையில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கல் அவசர அவசரமாக இப்போது அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

மேலும் படிக்க

03:46 PM (IST) Feb 19

நெடுஞ்சாலையை கம்பீரமாக கடந்த ஆண் சிங்கம்!பதட்டத்துடன் காத்திருந்த வாகன ஓட்டிகள்!

நெடுஞ்சாலையை கம்பீரமாக கடந்த ஆண் சிங்கம்!பதட்டத்துடன் காத்திருந்த வாகன ஓட்டிகள்!

02:13 PM (IST) Feb 19

மத்திய அமெரிக்காவில் ஆபத்தான கடும் குளிர் இருக்கும் ! வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை !

மத்திய அமெரிக்காவில் ஆபத்தான கடும் குளிர் இருக்கும் ! வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை !

02:11 PM (IST) Feb 19

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! கொதிக்கும் அண்ணாமலை

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! கொதிக்கும் அண்ணாமலை | Shocking News

02:00 PM (IST) Feb 19

திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

01:34 PM (IST) Feb 19

Pakistan vs New Zealand: முதல் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்குகிறது தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

01:04 PM (IST) Feb 19

பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்! தமிழ்நாட்டுக்கு மீண்டும் அல்வா!

ஃபெஞ்சல் புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ரூ.37,000 கோடி நிவாரணம் கோரிய நிலையில், மத்திய அரசு ஆந்திரா, நாகாலாந்து உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. 

மேலும் படிக்க

12:35 PM (IST) Feb 19

Karthigai Deepam: அபிராமியை பார்த்த சாமுண்டீஸ்வரி; எதிர்பாராத ட்விஸ்ட்? கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலில், இன்று சாமுண்டீஸ்வரி அபிராமியை சந்தித்த நிலையில்... அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க 

12:34 PM (IST) Feb 19

Vijay Vs Ajith: வசூல் ரீதியாக தளபதியை தொட திண்டாடும் அஜித்; கடந்த 5 வருடத்தில் இதை நோட் பண்ணுனீங்களா?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வந்தாலும், தளபதியின் வசூலை அஜித்தால் முறியடிக்க முடியவில்லை. கடந்த 5 வருடங்களில் அஜித் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் அதன் வசூலை பார்ப்போம்.

மேலும் படிக்க 

12:27 PM (IST) Feb 19

சுழல் சீசன் 2 டிரைலர்

பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ஓடிடியில் சக்கைப்போடு போட்ட வெப் தொடர் தான் சுழல். இந்த வெப் தொடரின் கதையை புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்து இருந்தனர். அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், சுழல் 2 வெப் தொடரின் விறுவிறுப்பான டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. 

Suzhal – The Vortex Season 2 Official Trailer | Prime Video India

11:53 AM (IST) Feb 19

ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு

2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக பேரிடர் நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

11:44 AM (IST) Feb 19

குட் பேட் அக்லி படத்துக்காக அஜித்துடன் இணையும் சிம்ரன்

தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இணைந்து நடிக்காமல் இருந்த இந்த ஜோடி தற்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. மேலும் படிக்க

11:13 AM (IST) Feb 19

பரபரப்பு! விஜய் கட்சியின் அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்! என்ன காரணம்? வெளியான தகவல்!

நடிகர் விஜய்யின் தவெக இளைஞரணி அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:56 AM (IST) Feb 19

இனியும் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை- சீறும் அண்ணாமலை

மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க