- Home
- Tamil Nadu News
- பரபரப்பு! விஜய் கட்சியின் அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்! என்ன காரணம்? வெளியான தகவல்!
பரபரப்பு! விஜய் கட்சியின் அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்! என்ன காரணம்? வெளியான தகவல்!
நடிகர் விஜய்யின் தவெக இளைஞரணி அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு! விஜய் கட்சியின் அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்! என்ன காரணம்? வெளியான தகவல்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். அதன் பிறகு விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே ஆளுங்கட்சியான திமுகவை கிழித்து தொங்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் என்பதால் கட்சியை கட்டமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியில் முதல் கட்சியாகத் தமிழக முஸ்லிம் லீக் கூட்டணியில் இணைந்துள்ளது.
tvk vijay
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தவெக சார்பில் திருவள்ளூரில் கட்டப்பட்ட இளைஞரணி அலுவலக கட்டிடத்தை போலீஸ் முதவியுடன் அதிகாரிகள் ஜேசிபியை வைத்து
இடி தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tvk vijay
திருவள்ளூர் நகர பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருவள்ளூர் பத்தியால்பேட்டை என்ற இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.
mumbai jcb
இது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததால் கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் இடித்து தரைமட்டாக்கினர். இந்த தவெக அலுவலகம் ஆக்கிரமிப்பு என்று முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. கட்டிடம் இடிக்கும் போது தவெகவினர் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.