- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: அபிராமியை பார்த்த சாமுண்டீஸ்வரி; எதிர்பாராத ட்விஸ்ட்? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: அபிராமியை பார்த்த சாமுண்டீஸ்வரி; எதிர்பாராத ட்விஸ்ட்? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில், இன்று சாமுண்டீஸ்வரி அபிராமியை சந்தித்த நிலையில்... அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 2-ஆம் பாகமாக தொடங்கப்பட்ட 'கார்த்திகை தீபம்' சீரியல் எதிர்பாராத திருப்பு முனையுடன், மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ரேவதி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க, அபிராமியை சாமுண்டீஸ்வரி சந்திக்கும் நிலையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
ரேவதி சொன்ன விஷயம்
எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்தாச்சா? என சாமுண்டீஸ்வரி கேட்க... ரேவதி, கார்த்திக்கின் அம்மாவுக்கு மட்டும் இன்னும்பத்திரிக்கை கொடுக்கவில்லை என கூறுகிறார். பின்னர் ரேவதி கார்த்திக்கிடம், உங்க அம்மாவுக்கும் பத்திரிக்கை கொடுக்கணும், அவங்க எங்கே இருக்காங்கனு கேளுங்கள் என கூற கார்த்திகே அம்மாவுக்கு போன் போட்டு விசாரித்து விட்டு, கோவிலில் இருப்பதாக சொல்கிறான்.
திருமண பத்திரிக்கை வைக்க கோவிலுக்கு வரும் சாமுண்டீஸ்வரி
கார்த்திக்குடன், ரேவதி பத்திரிக்கை வைக்க கிளம்பும் நிலையில், சாமுண்டீஸ்வரி நானும் பத்திரிக்கை கொடுக்க வரேன் என கூறி கார்த்திக்குக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். கார்த்திக் ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரியுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க, ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் இருவரும் அபிராமியை சாமுண்டீஸ்வரி பார்க்காமல் இருக்க வேண்டும் என அவளை காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள்.
அபிராமியை சந்தித்த சாமுண்டீஸ்வரி:
கார்த்திக்குடன் சாமுண்டீஸ்வரி மற்றும் ரேவதி இருவரும் கோவில் உள்ளே வர, அபிராமியை நாக்கில் அலகு குத்தி கொண்டு, முகம் முழுவதும் சந்தனத்தை பூசியபடி உள்ளார். இதனால் சாமுண்டீஸ்வரி அபிராமியை பார்த்தும் கூட, அவளால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போகிறது.கார்த்திக்கும் நிம்மதி ஆகிறான்.
அடையாளம் தெரியாமல் மாறிய அபிராமி:
கார்த்திக் எப்படிம்மா இப்படி என்று கேட்க.. ராஜராஜன் ரேவதியோடு, சாமுண்டீஸ்வரி வரும் விஷயத்தை ஏற்கனவே கூறி விட்டார் என்பதை சொல்கிறார். இதை நான் உன்னக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும்னு நெனச்சி தான் அலகு குத்தி கொண்டேன் என சொல்ல, கார்த்திகே நான் இன்னும் தீபாவின் நினைவில் இருந்து மீளவில்லை என்பதை சொல்கிறார்.
தாலியை மாற்றி வைக்க திட்டம்:
திருமண ஏற்பாடு ஒருபுறம் பரபரப்பாக நடக்க, தாலிக்கு தங்கம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி தாலி செய்வதற்காக தங்கம் எடுத்து கொடுக்க, ஆச்சாரி தங்கத்தை உருக்கி தாலி செய்கிறார். மயில்வாகனம் யாரும் தெரியாமல் பாட்டி கொடுத்த தாலியை மாற்றி வைக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? பாட்டி எப்படி கார்த்தி - ரேவதி திருமணத்தை நடத்தி வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.