- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: கார்த்திக்கு ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; உண்மைகள் அம்பலமாகுமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திக்கு ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; உண்மைகள் அம்பலமாகுமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடர், தற்போது ரேவதியின் திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று நடிக்க நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.

குடும்ப சென்டிமென்ட்டோடு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் 2
குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுக்க தவறுவது இல்லை. அந்த வகையில் கார்த்திகை தீபம் 2 சீரியல் முழுக்க குடும்ப உறவுகளின் பின்னணியில், எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், மயில்வாகனம் புடவையை மாற்றி வைக்க அது ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று கார்த்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி பற்றி தெரிந்து கொள்வோம்.
புடவையை மாற்றியது ஏன்
ரேவதி, மயில் வாகனத்திடம் நீங்க புடவை மாத்தி வச்ச விஷயம் எனக்கு தெரியும். எதுக்காக அப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க என கேட்கிறாள். அதற்க்கு மயில் வாகனம், பரமேஸ்வரி பாட்டி தான் இப்படி செய்ய சொன்னதாக கூறுகிறான். ரேவதி எனக்கு பாட்டி போன் நம்பர் வாங்கி கொடுங்க நான் அவங்க கிட்ட பேசணும் என்று கூற, ஒருவழியாக ரேவதிக்கு போன் நம்பர் கையிக்கு கிடைக்கிறது.
பாட்டியை கோவிலில் சந்திக்கும் ரேவதி:
பரமேஸ்வரி பாட்டிக்கு போன் பண்ணும் ரேவதி, பாட்டி உங்க கிட்ட நான் நேருல பேசணும் என சொல்ல... இருவரும் கோவிலில் சந்திக்கிறார்கள். பேத்தியை பார்த்து நெஞ்சுக்குள் பூரித்து போன பரமேஸ்வரி, எதுக்காக பாட்டி, இப்படி எல்லாம் பண்ணுறீங்க என கேட்கிறாள். நீ நான் கொடுத்த புடவையில் தான் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்காக தான் மாத்தி வெச்சேன் என சொல்ல. பாட்டியின் ஆசைக்கு ரேவதியும் மதிப்பு கொடுக்கிறாள். பாட்டி நீங்களும் என் கல்யாணத்துக்கு வந்து, என்ன ஆசீர்வாதம் பண்ணனும் என ரேவதி சொல்ல பரமேஸ்வரியும் சம்பாதிக்கிறார்.
சாமுண்டீஸ்வரியின் கேள்வி
அடுத்ததாக வீட்டில் சாமுண்டீஸ்வரி எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சா? என்று கேள்வி எழுப்ப ரேவதி கார்த்தியின் அம்மாவை தவிர எல்லோருக்கும் கொடுத்தாச்சு என்பது போல் சொல்ல, இதை கேட்டு கார்த்திக் ஷாக் ஆகிறான்.
அதிர்ச்சியில் கார்த்திக் :
இந்த அதிர்ச்சியில் இருந்து கார்த்தி மீண்டு வருவதற்கு முன்பு, சாமுண்டீஸ்வரி பத்திரிக்கை கொடுக்க கிளம்பிய ரேவதியிடம், தானும் வருவதாக சொல்ல கார்த்திக் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? சாமுண்டீஸ்வரிக்கு கார்த்தி தன்னுடைய மருமகன் என்பது தெரியவருமா? உண்மைகள் அம்பலமாகுமா? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை காண தவறாதீர்கள்.