- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: ராஜராஜன் செய்த தில்லு முல்லு; உச்சகட்ட கோபத்தில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ராஜராஜன் செய்த தில்லு முல்லு; உச்சகட்ட கோபத்தில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது TRP-யில் முதலிடத்தை பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.

ராஜராஜன் செய்யும் தில்லு முல்லு :
சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு புடவைகளோடு வந்த நிலையில், பாட்டியால் ராஜ ராஜராஜன் செய்யும் தில்லு முல்லு மற்றும், இதை தொடர்ந்து இன்று நடக்க போவது பற்றி பார்க்கலாம்.
மாயா - மகேஷின் கள்ள உறவு பற்றி டாக்டர் மூலம் உண்மையை தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி, மாயா வீட்டுக்கு வந்ததை பார்த்துவிட்டு உச்சகட்ட கோவம் அடைகிறாள். ஆனால் இதை அவர் வெளிகாட்டிக்கொள்ளாமல் உனக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோ என சொல்ல எல்லோரும் புடவை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
புடவையை கலக்க சொன்ன பாட்டி:
புடவை எடுக்கும் படலம் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, பரமேஸ்வரி பாட்டி மயில்வாகனத்திற்கு போன் செய்து, மகன் ராஜராஜனை அழைத்து கொண்டு அவர் சொல்லும் இடத்திற்கு வரவைக்கிறார். தன்னுடைய பேத்திக்கு எடுக்கப்படும் புடவையில் நான் கொடுக்கும் இந்த புடவையை வைத்துவிடு என சொல்ல... அம்மா சொன்னபடியே புடவை கடைக்காரர் எடுத்து வரும் புடவையோடு இந்த புடவையும் கலந்து வைக்கப்படுகிறது.
கார்த்தியிடம் உண்மையை சொன்ன மயில்வாகனம்:
பாட்டி ரேவதிக்கு வாங்கிய புடவையை தான், அவளும் தேர்வு செய்ய சாமுண்டீஸ்வரியும் ரொம்ப நல்ல இருக்கு இதையே எடுத்துக்கோ என சொல்கிறாள். மயில் வாகனம் கார்த்தியிடம் மெதுவாக ரேவதி எடுத்து பாட்டி கொடுத்த புடவை என சொல்ல, கார்த்தி இது எப்போ நடந்துச்சு என ஒன்னும் தெரியாமல் முழிக்கிறார்.
ரேவதிக்கு தெரியவரும் விஷயம்:
பின்னர் எப்படியோ இந்த விஷயம் ரேவதிக்கும் தெரியவர, அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
பாட்டியிடம் ரேவதி சொன்ன விஷயம்? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்!