- Home
- Cinema
- பாட்டியிடம் ரேவதி சொன்ன விஷயம்? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்!
பாட்டியிடம் ரேவதி சொன்ன விஷயம்? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல் எதிர்பாராத திருப்பு முனைகளுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

சாமுண்டீஸ்வரியிடம் பெண் கேட்ட பரமேஸ்வரி:
நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சொன்னபடி, பரமேஸ்வரி பாட்டி ஊரையே அழைத்து, சாமுண்டீஸ்வரியிடம் பெண் கேட்ட நிலையில், இதுகுறித்து கேள்விப்பட்டு கார்த்தி அதிர்ச்சி அடைகிறார். இதை தொடர்ந்து இன்று, சாமுண்டீஸ்வரிக்கே ஷாக் கொடுக்கும் சம்பவம் தான் அரங்கேறி இருக்கிறது. இன்றைய எபிசோட் குறித்த விவரங்களை பார்ப்போம்.
, ரேவதி பாட்டி சொன்ன விஷயத்தையே நினைத்து கொண்டிருக்கிறார்:
பரமேஸ்வரி பாட்டி வந்து போனதில் இருந்து, ரேவதி பாட்டி சொன்ன விஷயத்தையே நினைத்து கொண்டிருக்கிறார். இரண்டு குடும்பமும் ஒன்னு சேரனும் என்பது எனக்கு சந்தோசம் தான் என்றாலும், ஆனால் நிச்சயமான ஒரு பெண்ணை, பெண் கேட்பது சரியாக இருக்காது என வருத்தப்படுகிறார்.
பரமேஸ்வரி பாட்டியை சந்திக்கும் ரேவதி:
தன்னுடைய மனதில் இருக்கும் இந்த விஷயத்தை எப்படியாவது பாட்டியிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவெடுக்கும் ரேவதி, கார்த்தியின் உதவியோடு பரமேஸ்வரி பாட்டியை சந்திக்க முயல்கிறார். கார்த்திக் ரேவதியை கோவிலில் டிராப் செய்து விட்டு, சாமுண்டேஸ்வரி வர சொல்லி இருந்ததால் மீண்டும் வீட்டிற்கு செல்கிறார். பாட்டியும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், ரேவதி அவரிடம் "பாட்டி நீங்க நினைக்கிற மாதிரி இந்த குடும்பம், ஒன்னு சேரணும்ங்கிற ஆசை எனக்கும் இருக்கு" ஆனால் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன என்னை பெண் கேட்பது எப்படி சரியா இருக்கும் என கேள்வி கேட்கிறாள்.
சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி:
ரேவதி பாட்டியிடம் பேசி கொண்டே இருக்கும் போது, சாமுண்டீஸ்வரி தனது தோழிகளுக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக்கை அழைத்து கொண்டு, ரேவதி - பாட்டி சந்தித்து பேசி கொண்டிருக்கும் அதே கோவிலுக்கு வருகிறாள். ரேவதி மற்றும் பரமேஸ்வரியுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உரைக்கிறார்.
ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
சாமுண்டீஸ்வரி ரேவதியை அடித்து அழைத்து செல்கிறார்:
கோவில் என்றும் பாராமல் ரேவதியை அறைந்து, அங்கிருந்து வீட்டிற்க்கு இழுத்து செல்கிறாள். பாட்டியிடம் சாமுண்டீஸ்வரி கோவமாக பேசுவதை பார்த்து, ரேவதி நான் விருப்பப்பட்டு தான் பாட்டியை பார்க்க வந்தேன் என என சொல்கிறார். கார்த்திக்கும் இந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில், நாளை என்ன நடக்கும் என்பதை அறிய.. தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.