MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 19 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று அசுர பலத்துடன் இருக்கும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், சட்டப்பேரவை தேர்தல் பணிக்காகவும் சில மாற்றங்களை திமுக தலைமை செய்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்

2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்

அதன்படி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதாவது அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும், விழுப்புரத்திலும் அதிமுகவில் இருந்து வந்தவரும், சி.வி.சண்முகத்தை வீழ்த்திய லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த செஞ்சி மஸ்தான், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் அப்துல் வஹாப் ஆகியோருக்கும் மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: பரபரப்பு! விஜய் கட்சியின் அலுவலகத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்! என்ன காரணம்? வெளியான தகவல்!

 

34
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

44
எஸ்.எம்.மதுரா

எஸ்.எம்.மதுரா

ஏற்கனவே  தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.மதுரா செந்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நாமக்கல் மேற்கு மாவட்டக் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Recommended image1
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..
Recommended image3
Tamilnadu Government: விழுப்புரத்திற்கு ஆனந்தன்! சென்னைக்கு ஆதவ்! கோவை யார் தெரியுமா? மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved