MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?

SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?

முரசு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவாதால் கடலோர மாவட்டங்களுக்கு அலர்ட்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 02 2026, 01:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கனமழை காரணமாக ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு!
Image Credit : Asianet News

கனமழை காரணமாக ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, 2026 நவம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கனமழை காரணமாகப் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள செய்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையே விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிவிப்பைக் கவனித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
முரசு புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை!
Image Credit : chatgpt

முரசு புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?

37
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
Image Credit : Gemini

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையத்தின் மழை எச்சரிக்கையின்படி, நவம்பர் 2-ம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், 24 மணி நேரத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகும். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்

47
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Image Credit : Pinterest

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி திங்கட்கிழமை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலனும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!

57
7 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!
Image Credit : Pinterest

7 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Astrology: ஜோசியம் பார்த்து ரூ.1800 கோடி வருமானம்.! உண்மையில் கோடீஸ்வர யோகம் இதுதான்.! யாருக்கு தெரியுமா?

67
காற்றின் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு!
Image Credit : Pinterest

காற்றின் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு!

முரசு புயலின் தாக்கத்தால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் பகுதிகளில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

77
பொதுமக்கள் கவனத்திற்கு!
Image Credit : Chatgpt

பொதுமக்கள் கவனத்திற்கு!

கனமழை காரணமாகச் சாலைகளில் தண்ணீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மழை செய்திகள்
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
பள்ளிகள்
பள்ளி மாணவர்
ஏசியாநெட் நியூஸ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Related Stories
Recommended image1
ABS பிரேக், 60 கி.மீ மைலேஜ்: மழைக்கால பயணத்திற்கு ஏற்ற டாப் 5 டூ-வீலர்கள்!
Recommended image2
மழைக்கால ஈரப்பதத்தால் சுவரில் உப்பு பூத்து பெயிண்ட் உதிர்கிறதா? கிச்சனில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved