Tamil News Live Updates: மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? விஜய் கண்டனம்
சுருக்கம்
மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்கு சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என கூறுவது பாசிச அணுகுமுறையே. பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும், தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
09:12 PM (IST) Feb 16
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வேலூர் கோட்டையில் நடைபெற்ற அதிமுக இளைஞர் பாசறை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றும், 2026 தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கு குட் நியூஸ் – 20ஆம் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை!
MahaKumbh Mela School Holidays: 2025 கும்பமேளாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் VIP நுழைவு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம்! எச்சரித்த ஆணையம்! ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய அன்புமணி!
தமிழ்நாடு மின்சார வாரியம், கோடைக்கால மின் தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடு! ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்! சீமான் பேட்டி!
03:50 PM (IST) Feb 16
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
03:48 PM (IST) Feb 16
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!
தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
யோகிபாபு விபத்தில் சிக்கவில்லை; நடந்தது இதுதான் - வீடியோ வெளியிட்ட நடிகர் உதயா
நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் அக்யூஸ்ட் படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Scroll to load tweet…
02:06 PM (IST) Feb 16
New Delhi Station stampede|டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல்! 18 பேர் உயிரிழப்பு!
02:04 PM (IST) Feb 16
அமைச்சர் கே.என்.நேரு சொன்ன ஒற்றை வார்த்தை! ஷாக்கான கனிமொழி! அடுக்கிய குற்றச்சாட்டு!
தூத்துக்குடியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படாதது, திருச்செந்தூரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
9 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த கவுண்டமணி; ஒத்த ஓட்டு முத்தையா வசூல் எவ்வளவு?
Goundamani Starrer Otha Votu Muthaiya Box Office Collection : வாய்மை படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா படம் வெளியாகி லட்சக்கணக்கில் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஃபாசிச அணுகுமுறை; விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் கொந்தளித்த விஜய்
விகடன் செய்தித் தளம் முடக்கப்பட்ட விவாகரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் தளம் வாயிலாக தன் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் படிக்க
11:57 AM (IST) Feb 16
திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் சத்யராஜ் மகளுக்கு ஜாக்பாட்.! முக்கிய பதவியை தூக்கிக் கொடுத்த ஸ்டாலின்
திமுகவில் பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சாப்பிட்டதற்கு என்கிட்டையே காசு கேக்குறீயா? உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று பேர், பணம் கொடுக்க மறுத்து ஹோட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு, கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சொந்த ஊரையே மறந்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: இப்படி சொல்லி மாட்டிக்கிட்டாங்களே!
ராஷ்மிகா மந்தனா தொடர் வெற்றிப் படங்களுடன் சாதனை படைத்து வருகிறார். அதே நேரத்தில் அவரைச் சுற்றி சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தற்போது அவர் தனது சொந்த ஊர் ஹைதராபாத் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் பொய்களையே அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான்- விளாசும் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் மற்றும் நில மீட்பு குறித்து விளக்கினார். பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்தார்.
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் சாவா – 2 நாட்களில் ரூ.102.5 கோடி வசூல் குவித்து சாதனை!
Chhaava Box Office Collection Day 2 Report : விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவா படம் உலகளவில் ரூ.102.5 கோடி வசூல் குவித்துள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஷூட்டிங்கிற்காக தன் காரில் சென்றுகொண்டிருந்தார் யோகிபாபு. அப்போது வேலூர் அருகே வாலாஜாப்பேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் கார் மோதி இருக்கிறது. தில் நல்வாய்ப்பாக நடிகர் யோகிபாபு மற்றும் அவர் உடன் பயணித்தவர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர்.
09:49 AM (IST) Feb 16
திருப்பதி மலையில் மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தை.! பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.