- Home
- இந்தியா
- திருப்பதி மலையில் மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தை.! பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
திருப்பதி மலையில் மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தை.! பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டு மதியம் 2 மணிக்கு மேல் பாதயாத்திரை செல்ல அனுமதி இல்லை. இரவு 9.30 மணிக்கு மேல் நடைபாதை மூடப்படும்.

திருப்பதி மலையில் மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தை.! பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம்
திருப்பதி கோயிலுக்கு சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலும் இருந்து வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்தா 2023ஆம் ஆண்டு திருப்பதி மலையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை பெற்றோர் கண்முன்பாக கவ்வி பிடித்துச் சென்றது. இதனால் அலறி துடித்த பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் சிறுத்தைய விரட்டினர்.
திருப்பதியில் சிறுத்தை
ஆனால் ஒரு நொடியில் காட்டிற்குள் சிறுமியை இழுத்து சென்று விட்டது. அடுத்த சில நாட்களில் 3 வயது சிறுவனையும் தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் திருப்பதி வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், சிறுத்தைகளை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கயது. பிடிபட்ட சிறுத்தைகளை வேறு காட்டுப்பகுதிக்குள்ளும், உயிரியல் பூங்காவிலும் அடைக்கப்பட்டது. இதனால் திருப்பதி வரும் பக்தர்கள் ஓரவளவு நிம்மதி அடைந்திருந்த நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம்
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி இல்லையென தேவஸ்தானம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு நடந்து செல்ல பயன்படுத்தும் அலிப்பிரி நடைபாதை வழியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் உலாவும் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு எவ்விதமான பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் சில திடீர் நிபந்தனைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
பக்தர்களுக்கு நடமாட்டம்
அதன்படி தினமும் இரவு 9.30 மணிக்கு நடைபாதை மூடப்படுகிறது. எனவே பக்தர்கள் காலை 5 மணிக்கு துவங்கி இரவு 9:30 மணி வரை மட்டுமே திருப்பதி திருமலை இடையே நடந்து மலை ஏறி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் 70 பேர், 100 பேர் கொண்ட கும்பலாக செல்ல வேண்டும் என்றும், மதியம் 2 மணிக்கு மேல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டு நடந்து மலையேறி செல்லக்கூடாது என்றும் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களை அறிவுறுத்தி உள்ளது.