ஜில்லுன்னு ஒரு செய்தி! அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tamil Nadu Weather Update: Chance of rain in 10 districts in next 3 hours

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாலை 6 மணி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கோடை வெயில் நாளுக்கு நாள் வாட்டி வைத்து வருகிறது. பல இடங்களில் தினசரி வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

இந்தச் சூழலில், வானிலை ஆய்வு மையம் ஆறுதல் அளிக்கும் செய்தியைக் கூறியுள்ளது. மாலை 6 மணிவரை கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழையை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலை கிடைக்காமல் கழுதைப்பண்ணை தொடங்கிய இளைஞர்! லிட்டர் ரூ.5000 க்கு கழுதைப்பால் விற்பனை அமோகம்!

Tamil Nadu Weather Update: Chance of rain in 10 districts in next 3 hours

தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களுக்கு இன்று வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வரையறைப்படி, வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு தொடர்ச்சியாக 3 தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பு, தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதை வெப்ப அலை என்று வரையறை செய்துள்ளது.

குழந்தைகளை வைத்து 1000 டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்கிய குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios